இலங்கையர்கள் விரும்பும் சூப்பரான கருப்பு உளுந்து இட்லி பொடி செய்வது எப்படி?
கருப்பு உளுந்தில் தயாரிக்கப்படும் இட்லியை இலங்கையர்கள் தற்போது அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்.
பொதுவாக உளுந்தூ தோள் அகற்றப்படாத நிலை கருப்பு உளுந்து என்று அழைக்கின்றோம். இது தனி நறுமணம் அற்றது. அதே நேரம் மண் வாசனை அதிகமாகவே இருக்கும்.
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது கருப்பு உளுந்தினை பயன்படுத்துவது நல்லது.
ஏனென்றால் உளுந்து தோலில் குளுக்கோனஸ் ஸ்டாக் பெசன்ட் ஆறடிஸ் என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது.
தமிழர்களின் மங்கல நிகழ்வுகளில் உளுத்தும், சோறு நெடுங்காலமாக இடம் பெற்று வருவதாக பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இட்லி, தோசை, வடை போன்றவை வெள்ளையாக இருக்க வேண்டும் என்று உணவகங்கள் நினைத்த காரணத்தினால் வெள்ளை உளுந்து பிரபலம் ஆகிவிட்டது. ஆனால் உண்மையில் கருப்பு உளுந்து தான் பண்மடங்கு ஆரோக்கியமானது.
கருப்பு உளுந்து இட்லி பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து - 1 கப்
- கடலைப்பருப்பு - 1/4 கப்
- கட்டி பெருங்காயம் - சிறிதளவு
- பட்ட மிளகாய்(வரமிளகாய்) - 10
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
- பூண்டு - 2 (முழு பூண்டு)
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
கட்டி பெருங்காயத்தை 1 மேஜைகரண்டி எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் மொறு மொறு என்று வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் கருப்பு உளுந்தை எண்ணெய் சேர்க்காமல் குறைவான தீயில் வைத்து மொறு மொறு என்று சிறிது கலர் மாறும் வரை வறுக்கவும்.
இது நன்றாக வறுபட குறைந்தது 9 யிலிருந்து 10 நிமிடங்களாகும்.
பிறகு தட்டிற்கு மாற்றவும். கடலைப்பருப்புடன் 2 சொட்டு எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் வைத்து 4 நிமிடத்திற்கு பின் சிறிது கலர் மாறும் வரை வறுத்து பின்பு மற்றொரு தட்டில் கொட்டி வைக்கவும்.
மிளகாயை வெறும் வாணலியில் 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெள்ளை எள்ளையும் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். கறிவேப்பிலையுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். எல்லா பொருட்களை தனித்தனியாக வறுத்த பின் ஒரு அகலமான ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.
ஆறிய பின் மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கரகரப்பாக அரைத்த பின் அதில் தோல் உரிக்காத பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியை தொடர்ந்து போடாமல் சிறிது நிறுத்தி நிறுத்தி போட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த பின்பு ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இது 1 மாதம் வரை நல்ல வாசனையுடன் இருக்கும்.
சூப்பரான கருப்பு உளுந்து இட்லி பொடி ரெடி.