சர்க்கரை நோயாளிகளும் இந்த ஒரு காப்பியை விரும்பி விரும்பி குடிக்கலாம்...3 நிமிடத்தில் தயாரிக்கலாம்!
சர்க்கரை நோய் அதிகரித்து விட்டால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாமே தவிர முற்றிலுமாக குறைக்க முடியாது.
வாழ்நாள் முழுமைக்கும் நீங்கள் சர்க்கரை நோயினை மனதில் கொண்டு அதற்கேற்ப உணவுகள் சாப்பிட வேண்டும்.
ஒரு நாள் தானே ஒரு தடவை மட்டும் என்று உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொண்டு கண்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.
வெறும் 30 நாட்களில் தலைமுடி அடர்த்தியாக வளரணுமா? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக
எனினும், சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்க ஆசைப்பட்டால் அச்சமின்றி சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியைப் பயன்படுத்தலாம்.
இன்று கருப்பட்டி காபி போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
கருப்பட்டி காபி
தேவையான பொருட்கள்
- கருப்பட்டி - 1/4 கப்
- காபித்தூள் - 2 டீஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தரவு தீர்வு தரும் ஒரே மூலிகை! எப்படி சாப்பிடலாம்?
செய்முறை
கருப்பட்டியை துளாக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் காபித்தூளைப் போட்டு டிகாக்ஷன் இறங்கும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் அதில் தூளாக்கிய கருப்பட்டியை போட்டு இறக்கி வடிகட்டவும்.
விருப்பப்பட்டால் பால் சேர்த்தும் அருந்தலாம். நீரிழிவு நோயாளிகள் பால் விடாமல் அருந்துவது ஆரோக்கியமானது.