நீரிழிவு நோயாளிகளுக்கு நிரந்தரவு தீர்வு தரும் ஒரே மூலிகை! எப்படி சாப்பிடலாம்?
சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்தாக காணப்படுகின்றது. கசப்புச் சுவை உடைய இது இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது.
இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை ஆகும்.
அந்தவகையில் இதனை சர்க்கரைநோயாளிகள் எப்படி எடுத்து கொள்ளலாம்? வேறு என்ன நன்மைகள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
சர்க்கரை நோய்க்கு எப்படி சாப்பிடலாம்?
சிறுகுறிஞ்சான் உலர்த்தி பொடியாக்கி அதை நீரிழிவு நோய்க்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுகிறது. தினசரி அளவில் 3 முதல் 5 கிராம் வரை இதை எடுத்துகொள்ளலாம்.
இதன் இலையை பொடியாக்கி பசும்பாலில் கலந்தும் நீரிழிவுக்கு மருந்தாக எடுக்கலாம். இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் சர்க்கரை அளவை உயர்த்தாமலும் இருக்க உதவும். இந்த சிறுகுறிஞ்சான் இலைகளை தினமும் மென்று சாப்பிடலாம்.
அன்பே சிவம் சீரியல்.. மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிடும் வைரல் வீடியோ
வேறு நன்மைகள்
சிறுகுறிஞ்சான் இலைகள் உடல் பருமன், இரைப்பை பிரச்சனை வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும். சிறுகுறிஞ்சான் பொடியை தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு தேநீராக்கி குடிக்கலாம்.
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகள் கார்னியா மற்றும் பிற கண் நோய்களில் இலைகளின் சாறு மேற்பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.
சிறுகுறிஞ்சான் செடியின் வேர்களை வாய்வழியாக எடுத்து, பாம்பு கடித்த இடத்தில் தடவினால் விஷம் கட்டுப்படும்.
மஞ்சள் காமாலை சிகிச்சையிலும் இவை பயனுள்ளதாக இருக்கும். தாவர சாறு கல்லீரலுக்கு டானிக் ஆக இருக்கும். சிறுகுறிஞ்சான் வேர்களின் பேஸ்ட் விளக்கெண்ணெயுடன் கலந்து அரைக்கப்பட்டு மண்ணீரல் வீக்கத்துக்கு தடவப்படுகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் சிறுகுறிஞ்சான் கஷாயத்தை 40-50 மில்லி அளவுகளில் எடுத்துவந்தால் கற்கள் வெளியேறும்.