உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டலாமா? மீறி சாப்பிட்டால் என்ன நடக்கும்
பொதுவாகவே எம்மில் சிலர் சாப்பிட்டவுடன் இனிப்பாக எதாவது சாப்பிடுவது வழக்கம். அப்படி இனிப்பான உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு துண்டு வெல்லம் சாப்பிட்டால் உங்கள் உடலில் என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பது தெரியுமா?
உணவுக்குப் பின் வெல்லம்
வெல்லமானது எமது உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. வெல்லத்தில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் அதிகம் உள்ளது.
இவ்வாறு பல சத்துக்களைக் கொண்ட வெல்லத்தை உணவு சாப்பிட்டப்பின் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
வெல்லமானது செரிமானப் பிரச்சினைகளுக்கு மிகவும் நன்மை கொடுக்கும் அதனால் சாப்பிட்டவுடன் வெல்லம் ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சினைகள் இல்லாமல் போய் பலப்படும்.
வாயு, அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
உடலில் நோய் எதிர்ப்ப சக்தியை அதிகப்படுத்துவதற்கும் சாப்பிட்டவுடன் வெல்லம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்.
வெல்லத்தில் இருக்கும் பாஸ்பரஸ், கல்சியம் போன்ற சத்துக்கள் தேவையான அளவு இருப்பதால் சாப்பிட்டவுடன் வெல்லம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவாகும்.
இரத்த அழுத்த நோயாளிகளும் வெல்லம் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தாரளமாக வெல்லம் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் சாப்பிட்டவுடன் சாப்பிட்டால் உடல் எடை எளிதாக குறையும்.
இரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு வெல்லம் மிகவும் நன்மைகளைக் கொடுக்கும். வெல்லத்தில் இருக்கும் இரும்புச்சத்தும், பாஸ்பரஸ் சத்தும் உடலில் இரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும்.