Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
கில்லாடி ஜோடிஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான கில்லாடி ஜோடிஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தற்போது இலங்கையில் இருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியினை கடந்த வாரம் சஞ்சீவ் தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது மணிமேகலை தொகுப்பாளராக மாறியுள்ளார்.

இதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், குறித்த நிகழ்ச்சியும் பயங்கர சுவாசியமாக சென்றுள்ளது. நடனம் மட்டுமின்றி, காடு மலை கடலில் நடக்கும் த்ரில்லிங்கான விடயங்கள் பார்வையாளர்களை பதற வைக்கின்றது.
சஞ்சிவ் சினிமா வாய்ப்பிற்காக விலகியிருப்பாரா? மணிமேகலை தான் இனி நிரந்தரமான தொகுப்பாளினியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் தங்களது ஜோடி சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் வேறொரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களின் ஜோடி வீதிவீதியாக வியாபாரம் செய்துள்ளனர்.
இதில் கருவாடு விற்பனையிலும் இறங்கி பார்வையாளர்களை சிரிக்க வைத்துள்ளனர். சீரியல் மற்றும் சினிமா பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருவதால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |