காலை வெறும்வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்! பாரிய ஆபத்தை ஏற்படுத்துமாம்
காலை வேளையில் நிச்சயம் உணவுகள் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடாமல் இருந்தால் வயிற்றில் அமிலம் சுரந்து அதன் விளைவாக தேவையில்லாத நோய்கள் வர வாய்ப்புள்ளது. அதே நேரம் காலையில் நாம் என்ன உணவுகள் சாப்பிடுகிறோம் என்பது முக்கியமாகும்.
சிலவகை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்கு பங்கம் ஏற்படுத்திவிடும். அதனால் இரைப்பை பாதிப்புக்குள்ளாகும்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்
பழச்சாறு
குறிப்பாக, வெறும் வயிற்றில் பழச்சாறு பருகுவது நல்லதல்ல. அது வயிற்றுக்கு சுமையை ஏற்படுத்தி விடும். பழங்களில் பிரக்டோஸ் வடிவத்தில் இருக்கும் சர்க்கரை கல்லீரலுக்கும் கெடுதல் விளைவிக்கும். அதுபோல் இனிப்பு, கார பலகாரங்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
இரசாயன குளிர்பானங்கள்
காலையில் வெறும் வயிற்றில் இரசாயன குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். செரிமானத்தை தாமதப்படுத்தும்.
இன்றைய ராசிபலன்: குருவினால் உச்சத்தினால் ஏற்படும் பேரதிர்ஷ்டம்
ஐஸ் காபி
காலையில் ஐஸ் காபி பருகுவதையும் தவிர்க்க வேண்டும். அது சுறுசுறுப்பை தொலைத்து மந்தமான உணர்வை ஏற்படுத்திடும்.
சிட்ரஸ் பழம்
சிட்ரஸ் பழ வகைகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அவை செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.
கொய்யா, ஆரஞ்சு
காலையில் வெறும் வயிற்றில் கொய்யா, ஆரஞ்சு பழங்களை காலையில் சாப்பிடவே கூடாது.
தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்த மணமகள்! மயக்கம் தெளிந்து கொடுத்த ஷாக்
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள்
நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளும் வயிற்றுக்கு தீங்கு இழைக்கும். அவைகளை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படுத்திவிடும்.