வீட்டில் வெறுங்காலுடன் நடக்குறீங்களா? அப்போ இந்த ஆபத்துக்கள் உறுதி!
பொதுவாகவே வெளியில் செல்லும் போது பாதணிகள் இன்றியமையாதது. நாம் அணியும் ஆடைகளுக்கு மேலும் அழகு சேர்ப்பதிலும் பாதணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இப்படி வெளியில் பாவிக்கும் பாதணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பலர் வீடுகளில் இருக்கும் போது பெரும்பாலும் வெறும் காலில் நடக்கின்றனர்.
இப்படி வீட்டில் இருக்கும் போது வெறுங்காலுடன் நடப்பது சௌகரியமாகவும், எளிதாகவும் இருந்தாலும் இது ஆரோக்கியத்தை பெரிதும் பாதிப்பதாக ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் வெறும் காலுடன் நடப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வெறுங்காலுடன் நடப்பதால் என்ன ஆபத்து?
வீட்டில் வெறுங்காலுடன் நடப்பது மேலோட்டமாக பார்க்கும் போது கால்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது போல் தோன்றினாலும் கால்களில் சிறிய அளவில் பல காயங்களை ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் நோய் கிருமிகள் உடலினுள் செல்ல வாய்ப்பு காணப்படுகின்றது.
அது மாத்திரமன்றி நாம் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வெறும் காலில் நடக்கும் போது கூர்மையான பொருட்களை மிதிக்கவோ அல்லது ஈரமான மேற்பரப்பில் வழுக்கி விழவோ அல்லது சிறிய பூச்சிகளை மிதிக்கவே வாய்ப்பு காணப்படுகின்றது.
இந்த சிறிய விபத்துக்கள், நம் கால் விரல்களில் வெட்டுக்கள், காயங்கள் அல்லது எலும்பு முறிவுகள் போன்ற கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும்.குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து அதிகமாக காணப்படுகின்றது.
வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும், நுண்ணுயிர் கிருமிகள் இருக்கத்தான் செய்கிறது.ஆகவே வெறுங்காலுடன் நடப்பதால், நமது பாதங்களில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்று நோய்களை ஏற்படும் ஆபத்து அதிகரிக்கின்றது.
மேலும், வெறுங்காலுடன் நடப்பதால், குளியலறையின் ஃபிலோர்களில் அடிக்கடி ஏற்படும் சூடான, ஈரமான சூழலில் வளர்ந்து வரும் பூஞ்சை தொற்றுகளின் தாக்கம் ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மேலும் உடலின் முழு பாரத்தையும் சுமக்கும் தொழிலை பாதங்களே செய்கின்றன. அதனால் வீட்டில் இருக்கும் போதும் பொருதத்தமான உட்புற பாதணிகளை அணிய வேண்டியது அவசியம். இல்லாவிடில் முதுகு வலி மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கின்றது.
வீட்டில் வெறுங்காலுடன் நடப்பதன் காரணமாக வறண்ட காற்று மற்றும் கடினமான பரப்புகளில் உராய்வு ஏற்பட்டு நிரந்தரமாக குதிகால் வெடிப்பு ஏற்படுவதற்கு வழிவகுக்கும். ஆகவே உட்புற காலணிகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் பெருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |