சாப்பிட்ட பின்னர் மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்.... தீராத வறுமை ஏற்படும்!
பொதுவாகவே இந்து சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரம் ஆகியவற்றில் வாழ்க்கைக்கு தேவையான பல்வேறு விடயங்கள் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றது.
இவற்றை சரிவர பின்பற்றியதன் காரணத்தினாலேயே நமது முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்புடளும் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள்.
அந்த வகையில் இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சாப்பிட்ட பின்னர் செய்ய கூடாத விடங்கள் தெடர்பிலும் அதன் விளைவுகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சாப்பிட்ட பின்னர் செய்யக்கூடாதவை
பெரும்பாலானவர்கள் சாப்பிட்ட பின்னர் அதே தட்டில் கை கழுவும் பழக்கத்தை கொண்டிருக்கின்றார்கள். இது நாம் சாப்பிட்ட உணவை அவமதிக்கும் செயலாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு செய்வதால் வாழ்வில் வறுமையால் கஷ்டப்படும் நிலை ஏற்படும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
சாப்பிட்ட பிறகு வாஷ் பேசின் அல்லது சமையலறையில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் கைகளை கழுவுவதே சிறந்த முறையாகும். மேலும் சாப்பிட்ட உடன் தாமதிக்காமல் கைகளை காயவிடாமல் கைகளைக் கழுவி, சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
சிலர் கைகளை கழுவிய பின்னர் துணியால் துடைக்காமல் உதறிவிடுவார்கள் இந்த தவறை மறந்தும் கூட செய்யக்கூடாது. இதனால், கைகளில் இருக்கும் தண்ணீர் பிறர் மீது படும் வாய்ப்பு காணப்படுகின்றது. இது பெரும் பாவச்செயலாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு செய்வதால் வறுமை சூழும் என்பது ஐதீகம்.
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் அன்னபூரணி அருளாலேயே உணவு கிடைக்கின்றது. இதுவும் மகாலட்சுமியின் அவதாரம் ஆகும். இதனால் சாப்பிடும் முன்னர் அந்த உணவை கொடுத்த அன்னபூரணிக்கு நன்றி செலுத்த வேண்டியது அவசியம். அது மட்டுமன்றி சாப்பிட்ட பின்னர் சாப்பிட்ட தட்டை காயவிட கூடாது. இதுவும் தீராத பணக்கஷ்டத்தை கொடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
சாப்பிட்ட பின்னர் சிலபேர் பற்களில் சிக்கியுள்ள தூசுக்களை நீக்குவதற்கு ஊசி அல்லது டூத்பிக் பயன்படுத்துகிறார்கள்.இதுவும் வறுமையை ஏற்பத்தும். இந்த செயலும் உணவை அவமதிப்பதாகவே கருதப்படுகின்றது. இவ்வாறு பற்களில் சிக்கியிருக்கும் உணவு துகல்களை நீக்க, வாயில் தண்ணீர் ஊற்றி, கொப்பளித்து துப்புவதே சரியான முறையாகும்.
சாப்பிடும்போது பக்கவாட்டில் சாய்ந்து சாப்பிடுவதும் வறுமைக்கு வழிவகுக்கும். அத்துடன், சாப்பிட்ட உடன் தூங்குவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பதுடன் இது சாஸ்திரங்களின் அடிப்படையில் வறுமையை ஏற்படுத்தும். எனவே தவறியும் சாப்பிட்ட பின்னர் இவ்வாறான விடயங்களை செய்ய கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |