இளையராஜாவின் ஒருதலை காதலுக்கு நோ சொன்ன பிரபலம்: காதலை ஏற்காமல் டாடா காட்டிய சம்பவம்!
இளையராஜாவின் பாடல் என்றால் விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்ட ராஜாவின் வாழ்க்கையில் ஒரு காதல் கதை இருக்கிறதாம்.
ராஜாவின் காதல் கதை
இசைஞானி இளையராஜா 1970ஆம் ஆண்டுகளில் வீணை இசைத்து பிரபலமான வீணா காயத்ரி என்பவரை ஒரு தலையாக காதலித்திருக்கிறார்.
வீணா காயத்ரி வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கியவர். அவரது திறமையைப் பாராட்டி அவரை ஊக்குவிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு இசைத் துறையில் முக்கிய பொறுப்பையும் வழங்கினாராம்.
அவரை ஒரு தலையாக காதலித்து வந்த இளையராஜா, ஒருகட்டத்தில் அந்த பெண்ணிடம் சென்று தன் காதலை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.
அப்போது இளையராஜாவின் காதலை ஏற்க மறுத்து விட்டாராம். ஆனாலும் இளையராஜா அவரை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார். அப்போது காயத்ரி வேறொருவரை திருமணம் செய்துக் கொண்டு வெளிநாட்டில் குடியேறி விட்டாராம்.
அதற்குப் பிறகு இசையில் மூழ்கிப்போன இளையராஜா நாளடைவில் இசையின் ராஜாவாக மாறினார். இந்தக் கைக்கூடாத காதலுக்குப் பின் தான் ஜீவா என்றப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்டாராம்.
இந்தத் தம்பதிகளுக்கு கார்த்திக் ராஜா, பவதாரணி, யுவன்சங்கர் ராஜா என மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
ஆனால் இளையராஜாவின் மனைவி ஜீவா தான் 2011ஆம் ஆண்டு மரணம் மடைந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.