சிவாஜி கணேசனுக்கு எந்த அரசும் செய்யவில்லை தனி மனிதனாக நான் மட்டுமே செய்தேன்: இசைஞானி இளையராஜா வருத்தம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனு க்கு செய்ய வேண்டிய மரியாதையை எந்த அரசும் செய்யவில்லை என இசைஞானி இளையராஜா வேதனை தெரிவித்துள்ளார்.
மருது மோகன் எழுதிய “சிவாஜி கணேசன்” எனும் புத்தகம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா பாரம்பரிய மையத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார்.
மேலும், பாரதிராஜா, பாக்கியராஜ், பிரபு, விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டனர் தமிழ் சினிமாவில் தனது சிறப்பான நடிப்பு மற்றும் பேச்சு திறமையால் தனித்துவம் பெற்றவர் நடிகர் திலகம். அந்த இடத்தை நடிகர் சிவாஜி கணேசன் வென்றுள்ளார்.
1600 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை இயக்குநர் பல்வேறு வகையில் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா,
நடிகர் சிவாஜி கணேசனுடனான தனது நினைவுகளை பேசிக்கொண்டிருந்த போது உணர்ச்சியில் கண்கலங்கியுள்ளார்.
இசைஞானி இளையராஜா
அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் உள்ள சிவாஜி கணேசனின் ரசிகர்களை ஒன்று திரட்டி ஒருநாள் முழுவதும் நடிகர் திலகத்தை பற்றி பேச வேண்டும் என்பது எனக்கு ஆசை.
சிவாஜி அண்ணனுக்கு குதிரையில் அவர் அமர்ந்திருப்பது போல் வெள்ளி சிலை பரிசளிக்க வேண்டும் என கேட்டார்கள். அதற்கு சினிமா பிரபலங்கள் இவ்வளவு இவ்வளவு தொகை கொடுத்தாக சொன்னார்கள்.
அதற்கு நானே மொத்த தொகையையும் கொடுத்துவிடுகிறேன். யார் பெயரும் அதில் இருக்க கூடாது என கூறி மொத்த தொகையையும் கொடுத்துவிட்டேன்.
இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. திரை உலகினரும் அரசும் மரியாதை செய்யவில்லை. தனி மனிதனாக நான் மட்டும் தான் செய்தேன் என தெரிவித்துள்ளார்.