மறைந்த விவேக்கிற்கு கிடைக்கவிருக்கும் மரியாதை
பிரபல கொமடி நடிகர் விவேக்கின் மரணம் தமிழ் திரையுலகினை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கியது.
கடந்த 16ம் தேதி மாரடைப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் சிகிச்சை பலனின்றி 17ம் தேதி அதிகாலை உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமும் அவருக்கு அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்றி வந்த விவேக், அவருடைய கோரிக்கையின்படி ஒரு கோடி மரங்களை நடும் முயற்சியில் இருந்தார்.
சுமார் 33 லட்சத்திற்கும் மேலாக அவர் மரங்களை நட்டு உள்ள நிலையில் திடீரென மரணம் அடைந்து விட்டார். இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு உரிய மரியாதை செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் மோடி ஆகியோர் நடிகர் விவேக் படம் போட்ட தபால்தலையை வெளியிடத் திட்டமிட்டு உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.