அபார சுவையில் இப்படி இட்லி பொடி செய்து சாப்பிடுங்க! 10 இட்லி கூட பத்தாது
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்லி, தோசை தான் உணவாக இருக்கும்.
அந்த தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள இட்லி பொடியை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்தால் அருமையாக இருக்கும்.
இந்த சுவையான இட்லி பொடியை செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பருப்பு - 2 தேக்கரண்டி
- தே.எண்ணெய் - 2 தேக்கரண்டி
- உளுந்து - 4 தேக்கரண்டி
- கொத்தமல்லி விதை - 2 தேக்கரண்டி
- பூண்டு - 2 (நறுக்கியது)
- பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய் - 8
- கருவேப்பிலை - 2கொத்து
- புளி - 1தேக்கரண்டி
- தேங்காய் - 1 கப் (துருவியது)
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பருப்பை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு உளுந்து, கொத்தமல்லி, பூண்டு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், களிவேப்பில, புளி, பெருங்காயம் போன்றவற்றை எண்ணெய் சேர்த்து தனித்தனியாக வருத்து எடுத்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காயை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். இவ்வாறு முன்னதாக உளுந்து, கொத்தமல்லி, பூண்டு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், களிவேப்பிலை, புளி, பெருங்காயம் என்பவற்றை மிக்சி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு துருவிய தேங்காயை தேவையான அளவு உப்பு சேர்ந்து அரைத்துக் கொள்ளவும்.
இவ்வாறு அரைத்து வைத்த இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளலாம். இப்போது நாகர்கோயில் ஸ்டைலில் அனைவரும் விரும்பும் இட்லி பொடி தயார்.