இட்லி, தோசைக்கு ஏற்ற சூப்பர் ரெசிபி: ஈஸியாக செய்யலாம் கடலைப்பருப்பு சட்னி!
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும்.
அந்த தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள கடலைப்பருப்பு சட்னி இருந்தால் மிகவும் அருமையாக இருக்கும். சுவையான கடலைப்பருப்பு சட்னி செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு - 3 மேசைக்கரண்டி
- வரமிளகாய் - 2 பெரிய
- வெங்காயம் - 1 (நறுக்கியது)
- தக்காளி - 1 (நறுக்கியது)
- எண்ணெய் - 1 1/2 தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- உப்பு - சுவைக்கேற்ப
- தண்ணீர் - தேவையான அளவு
- எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
முதலில் பாத்திரத்தில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ளவும்.
பிறகு அதே பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் பின்னர் கடலை பருப்பு, வரமிளகாய், வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்து அதனுடன் உப்பு மற்றும் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த பிறகு சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு தனியாக வைத்துக் கொண்டு வேறொரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்த்து கிளறி எடுத்தால் கடலைப்பருப்பு சட்னி தயார்.