சுவையான இட்லி பொடி வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம்?
பெரும்பாலான இந்தியர்களின் உணவுப்பட்டியலில் காலை உணவாக இருப்பது இட்லி தான். ஆம் இட்லிக்கு அடிமையாகாத தமிழர்களை காண்பது என்பது அரிதே.
இட்லியை சாம்பார் சட்னி மட்டுமின்றி இட்லி பொடியுடன் சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும். ஆனால் கடைகளில் வாங்கும் இட்லி விலை அதிகமாக இருந்தாலும், நமக்கு ஏற்ப சுவையுடன் இருப்பதில்லை.
ஆதலால் மிகவும் சுலபமாக வீட்டிலேயே இட்லி பொடி தயார் செய்யும் முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
உருட்டு உளுந்து - 100 கிராம்
கடலை பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பொட்டு கடலை - 50 கிராம்
வெள்ளை எள்ளு - 50 கிராம்
மிளகாய் வத்தல் - தேவையான அளவு
மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்
பெருங்காய தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 5 கொத்து
செய்முறை
வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் உளுந்து, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பொட்டு கடலை, எள்ளு, மிளகாய் வத்தல், மிளகு சீரகம் அனைத்தையும் தனிதனியாக போட்டு வறுத்துக் கொள்ளவும்.
இறுதியாக கறிவேப்பிலையையும் சேர்த்து அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைக்க வேண்டும்.
வறுத்து வைத்த பொருட்கள் நன்று ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின்பு 1 ஸ்பூன் உப்பு கலந்து மிக்ஸியை 2 சுத்து அரையவிட்டு எடுக்கவும்.
பின்பு அரைத்து வைத்த இட்லி பொடி டப்பாவில் எடுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்... எண்ணெய் சேர்க்கப்படாததால் 3 மாதங்கள் வெளியே வைத்தாலும் கெட்டுப்போகாத இட்லி பொடி தயார்..