காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்! ஒரேநாளில் வீட்டிலேயே சரிசெய்யும் அற்புத கசாயம்

Fever Flu காய்ச்சல் Fever Home Remedies காய்ச்சல் மருந்து காய்ச்சல் கஷாயம்
By Fathima Apr 18, 2022 06:21 AM GMT
Report

இன்றைய சூழலில் காய்ச்சல் வந்துவிட்டாலே நாம் பதறிப்போகிறோம், ஏனெனில் உயிரை குடிக்கும் அளவுக்கு காய்ச்சல் அபாயகரமானதாகவும் மாறிவிடுகிறது.

ஆனால் காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் காய்ச்சல் ஏதோ ஒரு நோயின் அறிகுறியாக இருக்கும்.

அதாவது, ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது, இதைத்தான் காய்ச்சல் என குறிப்பிடுகின்றோம்.

மனிதனுடைய உடல் வெப்பநிலை பொதுவான 98.6 பாகை F. (37 பாகை C.) இலும் அதிகமாகும்போது, காய்ச்சல் இருப்பதாக கருதுகிறோம்.

ஆயினும், 100.4 பாகை F. (38 பாகை C.) அளவுக்கு வெப்பநிலை உயரும்வரை காய்ச்சல் இருப்பதாக கருதப்படுவதில்லை.

சாதாரணக் காய்ச்சல், தொடர் காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், அதிகமாகி குறைதல் என பல வகைகள் உண்டு.

காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்! ஒரேநாளில் வீட்டிலேயே சரிசெய்யும் அற்புத கசாயம் | Fever Home Remedies In Tamil

இதுதவிர காற்றின் மூலம் பரவக்கூடியது, சுகாதாரமின்மையால் வருவது, குடல்காய்ச்சல். டைபாய்டு, பாக்டீரியா தொற்று காரணமாக வருவது, மூளைக்காய்ச்சல், மலேரியா, டெங்கு என பல காய்ச்சல்கள் உண்டு.

காய்ச்சல் வந்தவுடனே எதனால் காய்ச்சல் வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம், சாதாரண வைரஸ் காய்ச்சலாக இருந்தால் வீட்டில் உள்ள மருத்துவ முறைகளின் மூலமே சரிசெய்து கொள்ளலாம்.

டைபாய்டு, டெங்கு, மலேரியா என வேற நோயாக இருப்பின் அதற்கேற்ற சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

இந்த பதிவில் வீட்டிலேயே நாம் செய்யக்கூடிய மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரக நோய் வராமல் தடுக்க வேண்டுமா? இந்த உணவுகளை அவசியம் சாப்பிடுங்க

காய்ச்சல் வந்தவுடன்

காய்ச்சல் வந்தாலே பதற்றமடையாமல் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம், இது நம் உடலின் வெப்பநிலையை அதிகரிக்காமலும், உடலில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ளும்.

ஏசி அறைகளில் தூங்காமல் நார்மல் வெப்பநிலையை உள்ள அறையை பயன்படுத்தலாம், அதிகளவு போர்வைகளையும் போர்த்திக் கொள்ள வேண்டாம், இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து விடும்.

பருத்தி துணிகளால் ஆன உடையை உடுத்திக் கொள்ளலாம், எளிதில் செரிமானம் ஆகக்கூடிய அரிசி கஞ்சி, பார்லி கஞ்சி, காய்கறிகள் சூப்பை உணவாக எடுத்துக் கொள்ளவும்.

பெரியவர்களாக இருப்பின் குளியல் சிறந்த ஒன்று, குழந்தைகளுக்கு ஈரத்துணி கொண்டு உடலை துடைத்துவிடுவது வெப்பநிலையை குறைக்கும்.

அவ்வப்போது சூடான நீரில் உப்பு போட்டு வாயை கொப்பளித்தால் தொண்டை தொற்றிலிருந்து விடுபடலாம், மேலும் இது தொண்டையில் உள்ள கிருமிகளை அழித்துவிடும்.

காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்! ஒரேநாளில் வீட்டிலேயே சரிசெய்யும் அற்புத கசாயம் | Fever Home Remedies In Tamil

மிளகு கசாயம்

ஒரு கைப்பிடி அளவு மிளகை எடுத்துக் கொண்டு, வெறும் வாணலியில் தீப்பொறி வரும்வரை வறுக்க வேண்டும், இதனை நன்றாக மத்தால் கடைந்து அடுப்பில் வைத்து இரண்ட டம்ளர் அளவு நன்றாக தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

நீர் பாதியாக குறைந்ததும், கால் டம்ளர் அளவு அருந்தலாம், சுமார் மூன்று மணிநேரத்தில் ஒருமுறை குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்! ஒரேநாளில் வீட்டிலேயே சரிசெய்யும் அற்புத கசாயம் | Fever Home Remedies In Tamil

கறிவேப்பிலை குடிநீர்

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையுடன் 10 மிளகு, அதைவிட இன்னொரு மடங்கு அதிகமாக சீரகம், சிறு துண்டு இஞ்சி சேர்த்து மையாக அரைத்து வெந்நீர் விட்டுக் கலந்து வடிகட்டினால் கறிவேப்பிலைக் குடிநீர் தயார்.

இதனுடன் தேன் சேர்த்து காலை, மாலை, இரவு என காய்ச்சல் குணமாகும்வரை குடிக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் இந்த 5 பழங்களை கட்டாயம் சாப்பிடலாம் 

கொத்தமல்லி விதை கசாயம்

இயற்கையிலேயே வைட்டமின்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்ஸ் அதிகம் நிறைந்த கொத்தமல்லி விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துவிடும்.

2 டம்ளர் தண்ணீருடன் சிறிது கொத்தமல்லி விதைகளை போட்டு நன்றாக கொதிக்க விடவும், இதனுடன் சிறிதளவு பால் மற்றும் தேன் சேர்த்து அருந்தினால் காய்ச்சல் குறையும்.

காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் இந்த கசாயத்தை அருந்தலாம்.

காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்! ஒரேநாளில் வீட்டிலேயே சரிசெய்யும் அற்புத கசாயம் | Fever Home Remedies In Tamil

புளியாக்கீரை கசாயம்

நன்றாக அலசி சுத்தம் செய்யப்பட்ட ஒரு கைப்பிடி அளவு புளியாக்கீரையுடன், தட்டி தூளாக்கிக் கொண்ட மிளகை சேர்க்கவும்.

இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துவிட்டு, 500 மிலி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், இது பாதியாக வற்றியதும் வடிகட்டி காலை, மாலை, மதியம் என மூன்று வேளையும் குடித்து வந்தால் காய்ச்சல் குறைந்துவிடும்.

தப்பித்தவறி கூட இந்த உணவுகளை பச்சையாக சாப்பிடாதீங்க!

பார்லி பால்

காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் பார்லி அரிசியை வாங்கி, தண்ணீர் சேர்த்து சாதம் பொங்குவதுபோல் வேகவைத்துச் சாப்பிடலாம். பார்லி அரிசியை பாலில் வேகவைத்து பனங்கற்கண்டு சேர்த்தும் சாப்பிடலாம்.

காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்! ஒரேநாளில் வீட்டிலேயே சரிசெய்யும் அற்புத கசாயம் | Fever Home Remedies In Tamil

துளசி குடிநீர்

ஆன்டி பக்டீரியல் மற்றும் ஆன்டிபயாடிக் அதிகம் நிறைந்த துளசி இலைகளில் குடிநீர் வைத்து அருந்துவது காய்ச்சலின் தீவிரத்தை குறைத்து விடும்.

துளசி இலைகளை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கும் போது, அதில் அரை டீஸ்பூன் அளவு கிராம்பு சேர்க்கவும்.

தண்ணீர் வற்றி பாதியாக வந்தவுடன் இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை இந்த நீரை குடித்து வந்தால் காய்ச்சல் பறந்தோடும்.

காலை எழுந்தவுடன் தண்ணீருடன் இதை மட்டும் சாப்பிட்டால் போதும்! 

மலைவேம்பு கசாயம்

பச்சையாகப் பறித்த மலைவேம்பு இலைகளுடன் சிறிது நீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 10 மில்லி வீதம் காலை, மாலை என மூன்று நாள் குடிக்கலாம்.

காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்! ஒரேநாளில் வீட்டிலேயே சரிசெய்யும் அற்புத கசாயம் | Fever Home Remedies In Tamil

பப்பாளி இலை கசாயம்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலைச்சாறை வெறுமனேயோ தேன் கலந்தோ குடித்து வந்தால் ரத்த தட்டணுக்கள் அதிகரிக்கும்.

புதிதாக பப்பாளி இலைகளில் காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 10 மி.லி வீதம் தினமும் 4 தடவை குடிக்க வேண்டும்.

நிலவேம்பு கசாயம்

நிலவேம்பு கசாயம் காய்ச்சலின் தீவிரத்தைக் குறைக்கும். நிலவேம்பு, சுக்கு, மிளகு, பற்பாடகம், விலாமிச்சை, சந்தனம், பேய்ப்புடல், கோரைக்கிழங்கு, வெட்டிவேர் ஆகியவை சேர்ந்த நிலவேம்புக் கலவையை தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டி 50 மி.லி வீதம் தினமும் இரண்டு தடவை குடித்துவருவது நல்லது.

இவர்கள் எல்லாம் கேழ்வரகை சாப்பிடவே கூடாது... மீறினால் நடக்கும் விபரீதம்

குழந்தைகளுக்கான மருந்து

இரண்டு டம்ளர் தண்ணீருடன் 1 டீஸ்பூன் மல்லி விதைகள் சேர்த்து அவை ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க வைத்து, ஆறவைத்து கருப்பட்டி சேர்த்து இளஞ்சூட்டுடன் குழந்தைக்கு கொடுத்துவந்தால் காய்ச்சலுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் நீரில் துளசி இலைகளை போட்டு கொதிக்க விடலாம், இந்த தண்ணீரை தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

காய்ச்சல் வந்தால் பயப்பட வேண்டாம்! ஒரேநாளில் வீட்டிலேயே சரிசெய்யும் அற்புத கசாயம் | Fever Home Remedies In Tamil

இரண்டு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை, குழந்தையின் பாதத்தில் மென்மையாக தேய்த்து வந்தால் உடலின் வெப்பநிலை குறைந்து விடும்.

அரை கப் தண்ணீரில் கைப்பிடி அல்லது 20 திராட்சைகளை சேர்த்து ஊறவிடவும். திராட்சை ஊறியதும் அவை மென்மையாக இருக்கும். பிறகு அதை பிழிந்து சாறு எடுத்து சில துளி எலுமிச்சை சாறு கலந்து தினமும் இரண்டு வேளை கொடுக்கலாம்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா? ஆபத்தான பிரச்சினை இருக்குமாம் ஜாக்கிரதை 

மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US