குஷ்பு இட்லி செய்யணுமா? இப்படி மாவு அரைங்க- இட்லி மாவு அரைப்பது எப்படி?
இட்லி, தோசை என்பவற்றை செய்யும்போது அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊறவைத்து அரைப்பதுதான் வழக்கம்.
அப்போதுதான் இட்லி, தோசை நன்றாக வரும் என்பது பலரின் கருத்து.
ஆனால், இரண்டையும் ஒன்றாகவும் ஊறவைத்து அரைக்கலாம். இட்லியும் சரி தோசையும் சரி மிகவும் நன்றாகவே வரும்.
முதலில் இட்லி செய்ய மாவு அரைக்கும்போது அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் ஒரே அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
image - my food story
பின்னர் இரண்டையும் நன்றாகக் கழுவி ஊறவைத்துக் கொள்ளவும். அத்துடன் வெந்தயம் இரண்டு கரண்டி சேர்த்து, 4 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
இட்லிக்கு மா அரைப்பதற்கு சுமார் 1 மணிநேரத்துக்கு முன்னால் வெள்ளை அவல் 1/2 ஆழாக்கு எடுத்து கழுவி ஊறவைக்க வேண்டும்.
காலையில் ஊறவைத்தால், இரவு சாப்பாட்டுக்கு மா பொங்கி தயாராகி விடும். சுமார் 4 மணிநேரத்துக்கு பின்னர் சிறிது சிறிதாக சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
image - healthshots
அத்துடன் அவலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இடையிடையே மாவை பதம் பார்த்து தேவையான அளவுக்கு தண்ணீர் விட்டுக்கொள்ள வேண்டும்.
20 நிமிடங்களின் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக அரைக்கும்போது க்ரைண்டரிலேயே உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மா நன்றாக திரண்டு வந்ததும், வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். மா பொங்கி வருவதற்கு எப்படியும் 8 மணிநேரமாவது செல்லும்.
இதுபோன்ற மாவில் இட்லி, தோசை சுட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
image - the economic times