தினமும் இட்லி எடுத்துக்கொண்டால் இவ்வளவு நன்மையா? பலருக்கும் தெரிந்திடாத உண்மை
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் இட்லியும் ஒன்றாகும். பொதுவாக இட்லி அனைத்துக் காலத்திலும் அனைவராலும் சாப்பிடக் கூடியதாக உள்ளது.
இதில் 60 – 70 கலோரிகள், 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 1 மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியன உள்ளன.
இதனை தினமும் சாப்பிடுவதனால் உடலுக்கு நல்ல பயன்கள் கிடைக்கின்றது.
குறிப்பாக தினமும் 4 இட்லி சாப்பிட்டால் 300 – 350 கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிடுவதனால் அனைத்து சத்துக்களும் சரியான அளவில் நமக்குக் கிடைக்கிறது.
தற்போது இட்லி சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
- நமது உடலில் இரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லி பெரும் பங்கு வகிக்கிறது.
- நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது மட்டுமின்றி நமது தசைகளையும் வலிமையாக வைத்துக் கொள்கிறது.
- மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கிறது.
- வாய்வுக்கோளாறு இருப்பவர்கள் தினந்தோறும் இட்லி சாப்பிடுவது மிகவும் நல்லது.
- நமது வயிற்றில் உள்ள புண்கள் சரிசெய்யும் மற்றும் நன்கு செரிமான ஆக இட்லி பெரிதும் உதவுகிறது.
- இட்லி நாம் சாப்பிட்டு 2 மணி நேரத்தில் செரிமானம் ஆகிவிடும். எனவே குழந்தைகளுக்கு இட்லி கொடுப்பது நல்லது.