Numerology: போன ஜென்மத்தில் நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கணும்? அப்போ பிறந்த தேதி சொல்லுங்க
எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது.
ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே “ரேடிக்ஸ் எண்” என அழைக்கப்படுகின்றது.
அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.
எண் கணிதத்தின் படி, எண்களை வைத்து அவர்கள் போன ஜென்மத்தில் எப்படி பிறந்திருப்பார்கள் என்பதை கண்டறியலாம். அப்படியாயின், 9 எண்களில் பிறந்தவர்களும் என்னவாக இருந்தார்கள் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
போன ஜென்மத்தில் நீங்க யாரு தெரியுமா?

| 1 | அரச குடும்பம் வாரிசு, மரியாதைமிக்க நபர், அரசியல் வாழ்க்கை இருந்திருக்கும், காவல் அதிகாரியாக இருந்திருக்கலாம் |
| 2 | இரட்டையர்களாக பிறந்திருப்பார்கள், உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர், காதல் வாழ்க்கையில் மிகுந்த குழப்பம் இருந்திருக்கும், குழப்பங்களே இறப்பிற்கு காரணமாக இருந்திருக்கும் மற்றும் காதல் மீதான ஏக்கம் இருந்திருக்கும். |
| 3 | படைப்பு திறன் அதிகம் இருக்கும், எழுத்தாளர்களாக இருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும், சமையல்காரர், தோட்டக்காரர் அல்லது வீட்டு உள் அலங்கார வடிவமைப்பாளராக இருந்திருப்பார்கள். உங்களுக்கு பொருள் ஆசையே இருந்திருக்காது, குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை இருந்திருக்கும் மற்றும் எளிமையான வாழ்க்கை அனுபவித்திருப்பீர்கள். |
| 4 | சுவாரஸ்யமான தனித்துவமான நபர், ராணுவ வீரர்களாக இருக்கும் வாய்ப்பு, சிறை காவலர் அல்லது மாஸ்டர்களாக இருந்திருக்கலாம், வாழ்க்கையில் அதிகமான தனிமை இருந்திருக்கும். |
| 5 | வாழ்க்கை கடினமானதாக இருக்கும், அடிக்கடி சண்டை போடும் நபர், வாழ்க்கையில் ஒரு இனிமை இருந்திருக்காது |
| 6 | மத ஆர்வம் கொண்டவர், ஆன்மீகவாதிகளாக நிறைய சாதனைகள் செய்திருக்கலாம், மக்கள் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபர், நகைச்சுவை நடிகர், சர்கஸில் வேலை செய்பவர் |
| 7 | வாழ்க்கையை மாற்றும் அறிவுரையாளர், பிரபலமான நபர், ஆன்மீகவாதியாக இருக்கலாம், எதிர்மறையான அனுபவம் உங்களுக்கு அதிகமாக இருந்திருக்கும். |
| 8 | நிறைய செல்வங்களுக்கு சொந்தக்காரர், பணக்கார தொழிலதிபர், நில உரிமையாளராக இருக்கும் வாய்ப்பு, வாழ்க்கையில் பணத்திற்கான முக்கியத்துவம் இருந்திருக்கும், கடின உழைப்பாளி |
| 9 | இயற்கைக்கு அப்பாற்பட்ட தொடர்பு, மன அழுத்தங்கள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது, ஜோதிடர், எண் கணிதம் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆராய்ச்சியாளர், பயணியாக இருக்கலாம். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).