உலக நாடுகளில் முதன்முறையாக தடைவிதித்த நாடு
வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு உலக நாடுகளில் முதன்முறையாக சிகரெட் போன்ற புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து மாலத்தீவு உத்தரவிட்டுள்ளது.
2007ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் மற்றும் அதற்கு பின்னர் பிறந்த அனைவருக்கும் புகையிலை பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை மாலத்தீவுக்கு வருகை தரும் இளம்வயது சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கும்
2025ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி முதல் குறித்த தடை அமுலில் உள்ளது, அதாவது ஜனவரி 1,2007 முதல் அதற்கு பின்னர் பிறந்தவர்களுக்கு சிகரெட், புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது, உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா வருபவர்களுக்கும் இது பொருந்தும்.
அத்துடன் இ-சிகரெட் மற்றும் vapingக்கும் தடை, 2024ம் ஆண்டு முதல் அனைத்து வயதினருக்கும் இ-சிகரெட் பயன்படுத்தவும் விற்கவும் தடை அமுலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மீறினால் அபராதம்
தடையை மீறி விற்பனை செய்யும் நபர்களுக்கு மாலத்தீவின் rufiyaa மதிப்பின் படி 50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் பயன்படுத்தும் நபருக்கு 5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பயன்பாட்டின் ஆபத்தில் இருந்து இளம்தலைமுறையினரை பாதுகாக்கவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
