பச்சை மிளகாய் சீக்கிரமாக கெட்டுப்போகுதா...இத ஃபாலோ பண்ணுங்க
அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் பச்சை மிளகாயும் ஒன்று.
சிலர் அன்றன்றைக்கு தேவையான காய்கறிகளை வாங்கும்பொழுது பச்சை மிளகாயையும் வாங்கி விடுவார்கள். ஆனால், ஒரு சிலர் இரண்டு வாரங்களுக்குத் தேவையான பொருட்களை முன்பே வாங்கி வைத்துவிடுவர்.
எது எவ்வாறெனினும் பச்சை மிளகாய் சீக்கிரமாக அழுகிவிடும் தன்மை கொண்டது. இனி பச்சை மிளகாயை அழுகாமல் நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்...
image - maangchi
டிஷ்யூ பேப்பர்
பச்சை மிளகாயை நன்றாக கழுவிவிட்டு, அதன் காம்புகளை நீக்கி, டிஷ்யூ பேப்பரில் சுற்றி ஒரு டப்பாவில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகவிடாமல் பாதுகாக்கலாம்.
ஜிப்லொக் பை
மிளகாயை நன்றாக கழுவ வேண்டும். பின்னர் அதில் ஈரம் இல்லாதவாறு துடைத்திவிட்டு, காம்புகளை நீக்கியதன் பின்னர் ஜிப்பொல் பைக்குள் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
காற்றுப்புகாத டப்பா
பச்சை மிளகாயின் காம்புகளை நீக்கிவிட்டு, ஒரு டப்பாவின் உள்ளே துணியை வைத்துவிட்டு, பச்சை மிளகாயை அதிவ் வைத்து ப்ரிட்ஜில் வைத்தால் ஒரு மாதம் வரையில் கெடாமல் இருக்கும்.
image - hoole food market
அலுமினிய ஃபாயில்
ஒரு தட்டில் காம்புகள் நீக்கப்பட்ட பச்சை மிளகாயை வைத்து, அதன் மீது அலுமினிய ஃபாயிலை பயன்படுத்தி நன்றாக மூடி பின்னர் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.
பேஸ்ட்டாக செய்துகொள்ளல்
நன்றாக கழுவிய பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து பேஸ்ட்போல் செய்துகொள்ள வேண்டும்.
குறிப்பு
டப்பாக்களில் அடைத்து வைக்கும்பொழுது எந்தக் காரணத்தைக் கொண்டும் காற்று புகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
எவ்வளவு பாதுகாத்து வைத்தாலும் சில நேரங்களில் பச்சை மிளகாய் நிறம் மாறி துர்நாற்றம் அடிக்கும். எனவே அதனை பார்த்து அப்புறப்படுத்தி விடவேண்டும். இல்லையென்றால் மற்ற மிளகாயையும் சேர்த்து அழுகச் செய்துவிடும்.
image - curry culture