பாத வெடிப்பை மறைய செய்யும் டிப்ஸ்- இலகுவாக செய்யலாம்
பொதுவாக நாம், முகம் மற்றும் தலைமுடிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆனால் நம்முடைய பாதத்திற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம்.
இதன் விளைவாக பாத வெடிப்பு, நகங்கள் உடைதல் போன்ற பிரச்சினைகள் வருகின்றன.
சிலரது கால்களுக்கும், உடலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். இந்த வேறுபாட்டை நீக்கி முகத்தைப் போல பாதத்தையும் மிருதுவாகவும் அழகாகவும் பராமரிப்பதற்கு முட்டை ஓடு உதவியாக இருக்கும்.
அப்படியாயின், முட்டை ஓட்டை வைத்து எப்படி பாதத்தை அழகாக வைத்து கொள்ளலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
முட்டை ஓடு பயன்படுத்துவது எப்படி?
முதலில் முட்டை ஓட்டை நன்றாக தண்ணீர் ஊற்றி அலசி வெயிலில் நாள் முழுவதும் காய விடவும். காய்ந்த பிறகு முட்டையில் இருக்கும் வாசனை சென்று விடும்.
மறுநாள் காலை காய்ந்த முட்டை ஓடுகளை எடுத்து சுத்தமான மிக்ஸியில் போட்டு அரைக்கவும். வெள்ளை நிற பவுடர் பதத்திற்கு வரும், அதனை எடுத்து சலித்து ஒரு போத்தலில் அடைத்து வைக்கவும்.
இப்பொழுது முட்டை ஓட்டின் பொடி தயாராகிவிட்டது. ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு முட்டை ஓட்டு பொடி, தயிர், தேன் மூன்றையும் கலந்து விட்டு கால்களுக்கு அப்ளை செய்ய வேண்டும்.
பாதங்களிலும் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு கழுவினால் கால்களில் இருக்கும் கருமை மாறி விடும். அத்துடன் கால்கள் பார்ப்பதற்கு பளபளப்பாகவும் இருக்கும்.
இந்த டிப்ஸை தினமும் பயன்படுத்தி வந்தால் கால்களில் இருக்கும் வெடிப்புகளும் மாறி விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
