பட்டுச்சேலையை பராமரிப்பதற்கு சிரமப்படுறீங்களா? பெண்களே இதோ டிப்ஸ்
பெண்கள் விரும்பி அணியும் பட்டுப்புடவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உலக அளவில் பெண்கள் விரும்பி அணியும் வேலையாக பட்டு சேலை இருக்கின்றது. இதன் மென்மை தன்மை, பளபளப்பு பெண்களை இன்னும் அழகாகவே காட்டுகின்றது.
ஆனால் இவை விலை மிக அதிகமாகவே இருக்கின்றது. இவ்வாறு பல ஆயிரம், லட்சங்களை கொடுத்து வாங்கும் பட்டு சேலையை பாதுகாப்பது என்பது கஷ்டமான விடயமாகும்.
பட்டுப்புடவையை எப்படி பராமரிப்பது?
பட்டு சேலையை வீட்டில் துவைப்பதை விட ட்ரை வாஷ் கொடுப்பது சிறந்தது ஆகும். நீண்ட நாட்களாக பட்டுப்புடவையை ஒரே மடிப்பில் வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் படிப்படியா் இழை விட்டு கிழிய ஆரம்பித்துவிடும். ஆதலால் அவ்வப்போது திருப்பி திருப்பி மடித்து வைக்கவும்.
இதமான வெயிலில் அவ்வப்போது காயவைத்து எடுக்கவும். ஏதும் கறை படிந்தால் உடனே தண்ணீர் கொண்டு துடைக்கவும். அதிக கரை என்றால் டூத்போஸ்ட் கொண்டு துடைத்துவிடவும்.
வெளியே சென்று வந்ததும் பட்டுப்புடவையை களைந்து உடனே மடித்து வைப்பது தவறாகும். சுமார் 2 அல்லது 3 மணி நேரம் நிழலில் உலர விட்டு பின்பு மடித்து வைக்கவும்.
எக்காரணத்தைக் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கவோ, சோப்பு, சோப்பு பவுடர் பயன்படுத்தி துவைக்கக்கூடாது. சாதாரண தண்ணீரில் அலசி எடுத்தாலே போதும்.
எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதி அல்லது பவுடரை வைத்து, ஒரு 5 நிமிடங்கள் கழித்து, மேலே சிறிய துணையை வைத்து அயர்ன் செய்தால் எண்ணெய் பசை முழுவதும், பவுடர், விபூதியில் படிந்துவிடும்.
வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் பட்டுப்புடவையை வைக்கக்கூடாது. சுமார் 3 மாதத்திற்கு ஒருமுறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர்த்தி எடுக்கவும்.
அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |