பெண்கள் கைவிரல்களில் வெள்ளி மோதிரம் அணிந்தால் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகுமா?
பெண்களாக இருந்தால் மோதிரம் அணிவதில் மிகவும் ஆர்வமாக இருப்பர்கள். இதன் காரணமாக ஏதோ ஒரு மோதிரத்தை மோதிர விரலில் அணிவது வழக்கம்.
அது தங்க மோதிரமா இருக்கலாம், வெள்ளி மோதிரமாக இருக்கலாம், காப்பர் மோதிரமாக இருக்கலாம்.ஆனால் மற்ற மோதிரங்ஙகளில் இல்லாத பலன் வெள்ளி மோதிரத்தில் உள்ளது.
ஜோதிடப்படி வெள்ளி மோதிரம் சந்திரனை குறிக்கிறது.இதனால் வெள்ளி மோதிரத்தை பெண்கள் விரலில் அணிந்தால் அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும்.அதிக பண புழக்கம் இருக்கும்.வாழ்வில் மென்மேலும் உயர முடியும்.
அத்துடன் உடலில் ஆரொக்கியமும் மேன்பாட்டுடன் இருக்கும்.இந்த வெள்ளி மோதிரத்தை எந்த விரலில் அணிந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளி மோதிரம் அணிவதன் பயன்
பெண்கள் அவர்களின் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிந்தால் பணவரவு பஞ்சம் இல்லாமல் அதிகமாகி கொண்டே இருக்கும். இதற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று சத்திய நாராயணா பூஜை செய்துவருதல் வேண்டும்.
இதனால் செல்வம் அதிகரிக்கும். பெண்கள் கட்டை விரலின் பக்கத்தில் இருக்கும் விரலில் வெள்ளி மெட்டி அணிந்து கொண்டால் விரலில் இருக்கும் நரம்புகள் வழியே கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் உடல் ஆரோக்கியம் மேன்படும். உடல் குளிச்சியாக இருக்க பெண்கள் வெள்ளி மோதிரம் அணிவது சிறந்தது. இதனால் மனரீதியான பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.
வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும் கையில் வெள்ளி மோதிரத்தை அணிந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைகளையும் தகர்த்து வெளியேறலாம்.
எனவே வெள்ளியால் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளும் பெண்கள் தங்களுடைய விரல்களில் அணிந்து கொண்டால் அது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |