chanakya topic: இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கணுமா? இந்த விடயங்களை கவனிங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக வாழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றிய ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவர் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இன்றும் உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.
சாணக்கிய நீதி சாஸ்திரத்தின் அடிப்படையில் வாழ்வில் அதிக பணத்தை ஈர்க்க வேண்டும் என்றால், உங்களிடம் இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செல்வத்தை இரட்டிப்பாக்கும் வழிகள்
சாணக்கிய நீதியின் அடிப்படையில் வாழ்வில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசையிருந்தல், நாம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயிலும் நீதி, நேர்மை கலந்திருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
நேர்மையான வழியில் சம்பாதித்த பணம் ஒரு போதும் நம்மைவிட்டு போகாது. தவறாக வழியில் அதிக பணம் சம்பாதித்தாலும், அது குறுகிய காலத்துக்கு மட்டுமே மகிழ்ச்சியை தரும். நேர்மையில்லாமல் வந்த பணம் பெரும் வறுமைக்கு வழிவகுக்கும் என சாணக்கியர் குறிா்ாிடுகின்றார்.
சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்றால், பணத்தை முகாமைத்துவம் செய்யும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். சரியான துறையில் முதலீடு செய்யும் ஆற்றல் இருந்தால், பணம் விரைவில் அதிகரித்துக்கொண்டே போகும்.
தானம் செய்யும் பழக்கம் பணத்தை ஈர்க்க துணைப்புரியும் என்று சாணக்கியர் குறிப்பிடுகின்றார். இருப்பினும் வருமானத்தை அறிந்து இதற்கேற்ற வகையில் தான் தானம் செய்ய வேண்டும். வருமானத்தை மிஞ்சிய தானம் உங்களை ஏழையாக்கிவிடும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
சோம்பேறித்தனம் மற்றும் அகந்தையான குணம் இவை இரண்டுமே பணத்தின் கடவுளாக கருதப்படும் லட்சுமி தேவிக்கு அரவே பிடிக்காத குணங்களாக பார்க்கப்படுகின்றது. இந்த குணங்களை முற்றிலும் தவிர்ப்பதன் மூலம் வாழ்வில் அதிக செல்வ செழிப்பை பெற முடியும் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
பணத்தை சம்பாதிக்க தெரிந்தால் மட்டுமே பணக்காரர் ஆகிவிட முடியாது, மாறாக அந்த பணத்தை சரியான வழியில் செலவு செய்ய கற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம். அப்போது தான் பணத்தை சேமித்து, அதனை சரியான வழியில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |