Ethirneechal: அதிரடியாக வந்து நின்ற ஜனனி! கடுப்பில் வாய்பேச முடியாமல் குணசேகரன்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், குணசேகரன் கூட்டணி கோபத்தின் உச்சத்தில் உள்ளனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் ஜாமீனில் வீட்டிற்கு வந்தாலும், ஜனனியை பழிவாங்குவதற்கு அனைத்து ஏற்பாட்டினையும் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து தப்பித்த ஜனனி, தேவசாகயத்திடம் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடினார்.

கடைசியில் ஜனனி மட்டுமின்றி அங்கு மாட்டிக் கொண்டிருந்த கலெக்டரையும் ஒருவழியாக காப்பாற்றி இருவரும் பாதுகாப்பாக வந்தனர்.
ஜனனியை குற்றவாளி அல்ல என்று சக்தி நிரூபித்த நிலையில், தற்போது மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு நுழைந்துள்ளார். ஜனனியின் வருகை குணசேகரனை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஜனனியின் வருகை அடுத்தடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |