ஒரே நாளில் சுவையான அப்பளம் தயார்! இனி வீட்டிலேயே செய்யலாம்
மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு சாதத்துடன் சாப்பிடுவதற்கு அப்பளம் இருந்தாலே போதும் சுவையாக இருக்கும்.
இதனை எண்ணெயில் பொறித்து எடுத்து மொறு மொறுப்பாக தனியாக சாப்பிட்டாலும் சுவையாக தான் இருக்கும்.
இவ்வளவு சுவையான அரிசி அப்பளத்தை வீட்டிலேயே எளிமையான மற்றும் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி- ஒரு கப்
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
சீரகம்- 1 தே.கரண்டி
தண்ணீர்- 2 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி சுடாக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பெருங்காயம், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
அதற்கிடையில் ஒரு கப் அரிசியை எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பேட்ஸ் பதத்துக்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் அரிசி பேஸ்ட்டை அதில் சேர்த்து இடைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நன்றாக கெட்டிப்பட்டதும், அடுப்பை அனைத்து ஆறவிட வேண்டும். ஆறியவும் தண்ணீரில் கைகளை நனைத்து அந்த கலவையை சிறிய உருண்டைகளாக செய்து ஒரு பிளாஸ்டிக் தாளில் பரப்பிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை குறைந்தது 8 மணிநேரத்துக்கு வெயிலில் அல்லது மின் விசிரியின் கீழ் விட்டு உலரவிட வேண்டும்.
பின்னர் அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் அப்பளம் தயார். இதனை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்வதால் குழந்கைகளுக்கும் பயமின்றி கொடுக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |