தக்க சமயத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு கை கொடுக்கும் வெந்தயம்
பொதுவாக நமக்கு ஏற்படும் தீராத நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தை விட வீட்டிலுள்ள பொருட்களை பயன்படுத்தி கை வைத்தியம் செய்வதால் நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.
அந்த வகையில், வீட்டு சமையல் அறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியில் கடுகு, சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இருக்கும் முக்கிய பொருள் தான் வெந்தயம்.
இது குழம்புகள், கூட்டு காய்கறிகள் சமைக்கும் போது கட்டாயமாக பயன்படுத்துவார்கள். அதே சமயம், மருத்துவத்திற்காகவும் வெந்தயம் பயன்படுத்தப்படுகின்றது.
மருத்துவப் பொருள் எனக் கூறப்படும் வெந்தயத்தில், வைட்டமின் சி, புரோட்டீன்கள், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் அல்கலாய்டுகள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அப்படியாயின் வெந்தயம் கைக் கொடுக்கும் தக்க சமயம் பற்றியும், வெந்தயம் எப்படி உதவுகின்றது என்றும் தொடர்ந்து பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெந்தயம் + சர்க்கரை வியாதி
1. மலச்சிக்கல் பிரச்சினையால் மலத்தை சரியாக கழிக்க முடியாமல் சிலர் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை நிரந்தரமாக தீர வாய்ப்பு இருக்கின்றது.
2. பெண்களின் மாதவிடாய் தள்ளிபோதல், அதிகமான சூடு காரணமாக ஏற்படும் வெள்ளைப்படுதல் இப்படியான பிரச்சினைகளுக்கு வெந்தயம் சிறந்த நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கின்றது.
3. வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது மாவுச்சத்து செரிமானம் அடைந்த பின்னர் உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கின்றது. அத்துடன் ரத்த குளுகோஸ் அளவுகள் துரிதமாக அதிகரிப்பதையும் முற்றாக குறைக்கின்றது.
4. சர்க்கரை நோயாளர்களுக்கு இன்சுலின் செயல்பாடு குறையும் பட்சத்தில் வெந்தயம் சாப்பிடுவது சிறந்தது. அத்துடன் இன்சுலின் செயல்பாட்டை வெந்தயம் ஊக்குவிக்கின்றது.
5. கணையத்தில் இருந்து இன்சுலின் ஹார்மோன் சுரப்பை தூண்டும் செயற்பாட்டை வெந்தயம் செய்கின்றது. இதனால் இன்சுலின் சுரப்பு அதிகமாகி மெட்டபாலிச நடவடிக்கைகள் மேம்படும்.
6. ரத்த சர்க்கரை, இதய நோய் ஆகிய நோய்களை தீவிரப்படுத்தும் கெட்டக் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கின்றது.
7. வெந்தயத்தில் ஆண்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் உள்ளன. இது ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் அளவுவை குறைத்து ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |