வீட்டு வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன்? பலரும் அறியாத அறிவியல் காரணம்
பல வீடுகளின் வாசலில் எலுமிச்சை மற்றும் மிளகாயை தொங்கவிடுவதை நாம் அவதானித்திருப்போம். இதற்கான காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு மதத்தினரும் சில பழக்க வழக்ககங்களை பின்பற்றி வரும் நிலையில், இவை காலம் காலமாகவும் நடைபெற்று வருகின்றது. ஆனால் அதற்கான விளக்கம் எதுவும் நமக்கு தெரிவதில்லை.
அந்த வகையில் புதிய கார், அல்லது வீடு, வணிக இடங்களில் எலுமிச்சையுடன் மிளகாய் வாசலில் தொங்குவதை நாம் அவதானித்திருப்போம்.
இவை மற்றவர்கள் கண் எரிச்சல் நம் மீது படக்கூடாது என்று நினைத்துள்ள நிலையில், இதில் சில அறிவியல் காரணமும் உள்ளது.
எலுமிச்சை மிளகாய் தொங்கவிடுவது ஏன்?
இந்து மதத்தின் நம்பிக்கையின் படி செல்வத்தின் தேவி லஷ்மிக்கு ஒரு சகோதரி இருப்பதாகவும், அவர் அன்னலட்சுமி என்று கூறப்படுகின்றது. இதில் லஷ்மி மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னமாக இருந்தாலும், சோகமும் வறுமையும் அன்னலக்ஷியுடன் தொடர்புடையதாம்.
லக்ஷமிக்கு இனிப்பு மற்றும் மணம் நிறைந்த உணவுகளும், அன்ன லட்சுமிக்கு புளிப்பு மற்றும் காரமான உணவுகளும் விருப்பமாம். அன்னலட்சுமி வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளார்கள்.
ஆனால் இதற்கு அறியல் காரணம் என்னவெனில், பழங்காலத்தில் மக்கள் காடுகளில் நடந்து செல்லும் சூழ்நிலையில், சோர்வுக்கு எலுமிச்சையும், வழியில் பாம்பு எதுவும் கடித்துவிட்டால், மிளகாயை சாப்பிட்டு பாம்பு விஷமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளவும் தொங்கவிடுவார்களாம்.
கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நிகழும் அதிசயம்
மிளகாய் காரமாக இருந்தால், பாம்பு கடித்ததில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும், ஒருவேளை மிளகாயில் எந்தவொரு சுவையும் தெரியவில்லையென்றால், பாம்பின் விஷம் உடலில் கலந்துவிட்டது என்று அர்த்தம்.
மேலும் எலுமிச்சை மிளகாய் இரண்டும் பூச்சிக்கொல்லி பண்புகள் கொண்டதாகும். கொசு, ஈக்கள், பூச்சிகள் வராமல் தடுக்கின்றது.
மேலும் வெளியில் உள்ளவர்களின் தீய கண்கள் வீட்டில் படாமல் இருக்கவும் இதனை வாசலில் தொங்க விடுகின்றனர்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |