பரிசோதனைக்காக சென்ற நபர் வயிற்றில் இருந்தது என்ன? ஷாக்கில் மருத்துவர்கள்!
குடல் பரிசோதனைக்காக சென்ற நபருக்கு நேர்ந்த கதி சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் வெளியாகி வருகின்றது.
அமெரிக்கா - Missouri மாகாணத்தைச் சேர்ந்த 63 வயது அமெரிக்கர் ஒருவர், குடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அவரின் வேண்டுக்கோளுக்கு அமைவாக அவருக்கு colonoscopy என்னும் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பரிசோதனையில் ஆசன வாயில் வழியாக குட்டி கமெராவொன்றை செலுத்தி வயிற்றுக்குள் என்ன இருக்கின்றது என்பதனை பார்ப்பதாகும்.
பல மணி நேரம் ஆராய்ச்சியின் பின்னர் குறித்து நபரின் வயிற்றுக்குள் ஏதோவொன்று அசைவதை அவதானித்துள்ளனர்.
கமெராவில் சிக்கிய ஈ
நீண்ட நேர தேடுதலின் பின்னர் அது ஈ என அடையாளம் கண்டுள்ளனர்.
பொதுவாக வயிற்றுக்குள் செல்லும் உணவு அரைக்கப்பட்டு, சிறுகுடலுக்குச் சென்று தேவையான சத்துப்பொருட்கள் உறிஞ்சப்பட்டு, மீதமுள்ள பொருட்கள்தான் பெருங்குடலை அடையும்.
ஆனால் குறித்து ஈ முழுமையாக பெருங்குடலை அடைந்துள்ளது. இந்த colonoscopy பரிசோதனைக்கு 24 மணி நேரம் முன்பே சாப்பிடுவதை நிறுத்திவிடவேண்டும்.
இப்படியொரு நிலையில் எப்படி ஈ வயிற்றுக்குள் சென்றது என மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |