இந்த காயை இரண்டாக பிளந்து பூசுங்க.. தொடை இடுக்கிலுள்ள கருப்பு மறையும்!
நம்மிள் பலருக்கு தொடை இடுக்குகளில் கருப்பாக இருக்கும்.
இது உடல் பருமன், அதிகப்படியான வியர்வை, தொடைகளின் உராய்வு, இறுக்குமான ஆடைகள் அணிதல், ஹார்மோன் பாதிப்பு, சரியான பராமரிப்பு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் வரும்.
இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை கொடுக்காவிட்டால் நிலைமை மோசமடைந்து கருமை தொடை முழுவதும் வர வாய்ப்பு உள்ளது.
இந்த கருமையை இல்லாமல் செய்வதற்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் சில சமயங்களில் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இவற்றை விட வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து தொடையிலுள்ள கருமையை எளிதாக நீக்கலாம்.
அந்த வகையில், தொடை பகுதியில் உள்ள கருமையை எப்படி இலகுவாக இல்லாமல் செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை ஜெல்
கற்றாழைக்கு இயற்கையாகவே குளிர வைக்கும் தன்மை இருப்பதால் சருமத்திற்கு குளிர்ச்சயளிக்கும். அதே சமயம் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் சருமத்திலுள்ள எரிச்சல் மற்றும் அரிப்பு இல்லாமல் போகும்.
தொடையில் கருமையுள்ளவர்கள் கற்றாழை ஜெல்லை லேசாக தொடையில் தடவி சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால் கருமை மறைந்து விடும்.
உருளைக்கிழங்கு
கண்களில் உள்ள கருவளையத்தை உருளைக்கிழங்கு இல்லாமல் செய்யும். கருமையை இல்லாமல் செய்ய உருளைக்கிழங்கு இரண்டாக வீட்டில் அதை வட்ட வடிவில் கருமையான தொடை பகுதியில் நன்கு தடவி விட்டு, 15 நிமிடங்கள் காய விடவும். அதன் பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் தொடையில் உள்ள கருமை மறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |