ஒரு வருடம் ஆனாலும் கோதுமை மாவில் வண்டு வரக்கூடாதா? இந்த டிப்ஸை செய்து பாருங்க
கோதுமை மாவில் வண்டு, புழுக்கள் வராமல் இருக்க, வருட கணக்கில் பிரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நாம் கடைகளிலோ, அல்லது அரைவை மிஷினிலோ அரைக்கும் கோதுமை மாவு ஒரு குறிப்பிட்ட மாதத்திற்கு பின்பு வண்டு, பூச்சி வர ஆரம்பித்துவிடும்.
இதனால் குறித்த மாவை நாம் பயன்படுத்தமுடியாமல் குப்பை கொட்டும் நிலையும் ஏற்படும். தற்போது இந்த பிரச்சனையினை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
இதை மட்டும் செய்திடுங்க
கோதுமை மாவில் ஏதாவது வித்தியாசமான வாசனை வந்தால் உடனே சல்லடை வைத்து சலித்து பார்க்கவும். அதில் வண்டு, பூச்சி இருந்தால் வெளியேறிவிடும்.
வாரத்திற்கு இரண்டு முறை வெயிலில் கண்டிப்பாக காய வைக்கவும். இதனால் பூச்சி, வண்டு, புழு வரும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.
வீடுகளில் அரைக்கும் மாவாக இருந்தாலும் சரி, கடையில் வாங்கும் மாவாக இருந்தாலும், 2 ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். இவ்வாறு செய்தால் மாவு ப்ரஷ்ஷாக இருக்கும்.
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து அதனை வெயிலில் உலர்த்தி பின்பு, துணியில் கட்டி கோதுமை மாவு வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைக்கலாம்.
கோதுமை மாவை டப்பாவில் போடும் முன்பு டப்பாவில் சில கிராம்புகளை போட்டு பின்பு, மாவை போட்டு வைக்கவும். கடைசியாக மாவின் மேலேயும் சில கிராம்பை போட்டு மூடி வைக்கவும். இதனாலும் பூச்சி, வண்டு வராமல் இருக்கும்.
பெருங்காயத்தையும் கோதுமை மாவு டப்பாவில் போட்டு வைக்கலாம். அல்லது பூண்டின் தோலையும் கூட மாவு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
கோதுமை மாவினை எப்பொழுதும் காற்று புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைக்கவும். இதில் சில பிரியாணி இலைகளைக் கூட போட்டு வைக்கலாம்.
தேவைக்கு ஏற்ப மட்டும் மாவை வாங்கிக் கொள்ளவும். ஒரே நேரத்தில் 5-10 கிலோ வாங்கி வைக்க வேண்டாம். கோதுமை மாவினை ப்ரிட்ஜில் வைத்தாலும் நீண்ட நாள் ப்ரஷாக இருக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |