வெற்றிலையுடன் கஸ்தூரி சேர்த்து மடித்து கொடுத்தால் என்ன நடக்கும்? குளிர்காலத்தில் செய்து பாருங்க!
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களின் குழந்தையின் நன்மை கருதி சில மூலிகைகளை எடுத்து கொள்வார்கள்.
இந்த பொருட்கள் எல்லாம் மருத்துவர்கள் சிபாரிசு செய்து வாங்குவதில்லை.
ஆதிகாலம் தொட்டு பிரசவம் பார்க்கும் பாட்டிமார்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் மருத்துவ குறிப்புகளில் இதுவும் ஒன்று.
அந்த வகையில் குழந்தை பிறந்தவுடன் சில விடயங்களை காலங்காலமாக செய்து வருகிறார்கள். இது குறித்து இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
குழந்தை பிறந்தவுடன் செய்யும் சில மரபுகள்
குழந்தை பிறந்தவுடன் தாய் உட்பட குழந்தையையும் ஆறுவகை இலைகள் பறித்து அவர்களை குளிக்க வைப்பார்கள். அதில் கொய்யா இலை, மஞ்சள், மாவிலை, துளசி, வேப்பிலை உள்ளிட்ட இலைகள் உள்ளடங்கும்.
குழந்தையை தலைகீழாக தூக்கி சுத்த விடுவார்கள்.
குழந்தையின் கை, கால், தலை, மூக்கு என்பவற்றை நன்றாக நீவுவார்கள்.
தாயிற்கு மூலிகைப்பொருள்கள் சிலவற்றை வாங்கி ரசம், குழம்பு, சூப் இது போன்ற உணவுகள் செய்து கொடுப்பார்கள்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெருங்காயம் சாப்பிட்டு விட்டு குழந்தையின் காது, மூக்கு, வாய் ஆகிய இடங்களில் ஊதுவார்கள்.
பிரசவித்த தாயின் உடம்பிற்கு குளிர் வந்து விடக் கூடாது என கஸ்தூரியை வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிட்டு விட்டு குழந்தையின் வாயில் ஊதுவார்கள்.
வெள்ளைப்பூடு, பால் சுறா கருவாடு, நெத்தலி ஆகியவற்றில் நன்றாக பால் குழம்பு செய்து கொடுப்பார்கள். இது தாய்பால் சுரப்பதை அதிகமாக்கும்.