எப்பேர்பட்ட வைரஸ்களையும் ஓட ஓட விரட்டும் மூலிகை டீ! நீங்களும் செய்யலாம்
பொதுவாக இன்றைய காலப்பகுதியில் வைரஸ்கள் மூலம் நிறைய நோய்கள் பரவுகிறது.
இந்த நோய்கள் பெரியவர்களை விட சிறுவர்களை அதிகமாக தாக்குகிறது.
இதற்காக பல மருந்து வில்லைகளை கொடுத்திருப்போம். அது அவ்வளவு பயனை தராது.
மேலும் சளி பிரச்சினையுள்ளவர்கள் வைரஸ் காய்ச்சலால் அதிகமாக கஷ்டப்படுவார்கள்.
இதனால் உடல் சோர்வு, தலைவலி, நெஞ்சி வலி, வீசிங் என பல நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதனை நாம் வீட்டிலிருக்கும் சில பொருட்களை கொண்டு கட்டுபடுத்த முடியும்.
அந்த வகையில் வைரஸ் ஓட ஓட் விரட்டியடிக்கும் சூப்பரான மூலிகை டீ எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
மூலிகைப்பொடிக்கான பொருட்கள்
சுக்கு - 100 கிராம்
அதிமதூரம் - 100 கிராம்
சித்தரத்தை- 30 கிராம்
கடுகாய் தோல் - 30 கிராம்
மஞ்சள்த்தூள் - 10 கிராம்
திப்பிலி - 5 கிராம்
ஓமம் - 5 கிராம்
கிராம்பு - 5 கிராம்
மிளகு - 5 கிராம்
டீ க்கான பொருட்கள்
தண்ணீர் - தேவையானளவு
நாட்டுசக்கரை - சுவைக்கேற்ப
புதினா இலைகள் - 2
செய்முறை
முதலில் மூலிகைப் பொருட்கள் என தரப்பட்டிருக்கும் மருத்துவ குணமிக்க பொருட்களை நன்றாக இடித்து காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பருமனின் பெரியதாக காணப்பட்டால் விரைவில் மிக்ஸியில் போட்டு பொடியாக்க முடியாது. இதனால் நன்றாக காய வைத்து விட்டு சுத்தியில் அல்லது பாரமான பொருட்களை வைத்து இடித்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து இவையனைத்தையும் மிக்ஸி சாரில் போட்டு நன்றாக பவுடர் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் 1.5 கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்கவிட்டு, அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடி 1.5 டேபள் ஸ்பூனை சேர்த்து நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.
இதனை தொடர்ந்து அதே தண்ணீரில் புதினா இலைகள் இருந்தால் சேர்த்து கொள்ளலாம். ஏனெனின் இதனால் டீயின் வாசனையை அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கு இதனை கொடுக்கும் போது சிறிது நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் டீயை நன்றாக ஆரவிட்டு அதனை வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த மூலிகை டீ தயார்!