ஆறு வகை நோய்களுக்கு மருந்தாகும் புதினா இலைகள்! இதோ...
அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளில் புதினாவை சேர்த்துக் கொள்வதனால் உடலில் ஏற்படும் ஆறு வகை பிரச்சினைகள் குணமாகிறது.
புதினாவில் அதிகமான நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் என பல்வேறு சத்துக்கள் காணப்படுகின்றன.
இவையனைத்தும் எமது உடலில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துகிறது. அந்த வகையில் புதினாவின் பயன்பாடுகளை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
புதினாவில் இருக்கும் அற்புதங்கள்
நாம் உண்ணும் உணவோடு புதினாவை சேர்த்துக் கொள்வதனால் உணவு செரிமானம் பிரச்சினைகள், உடல் சூடு போன்ற பிரச்சினையை கட்டுபடுத்துகிறது.
தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலி போன்ற பிரச்சினைகளுக்கு புதினா கீரையை நீர் விடாமல் அரைத்து பற்றுப் பயன்படுத்தினால் வலி குறையும்.
புதினா கீரை ஆஸ்த்துமா பிரச்சினைகளை கட்டுபடுத்துகிறது மற்றும் சிறு நீர் கழிப்பதில் எரிச்சல் உள்ளவர்கள் புதினாவை குடிநீராக தயார் செய்து குடித்து வந்தால் எரிச்சல் தணியும்.
புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு போன்றவற்றை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து கழுவினால் பொடுகு பிரச்சினைகள் நீங்கிகூந்தல் பளபளப்பாகும்.
மேலும் மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக்கும் தனி தன்மை புதினாவிற்கு உண்டு. இவற்றை இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் மேற்குறிப்பிட்ட நோய்கள் குணமாகும்.
தோல் பிணிகள், முகப்பரு போன்ற சரும பிரச்சினைகளுக்கும் புதினா இலைகளை பயன்படுத்துவார்கள்.