வலியால் துடித்த தங்கை: பிரசவம் பார்த்த அண்ணன்! இறுதியில் அரங்கேறிய சோகம்
சென்னையில் தங்கைக்கு வீட்டிலேயே அண்ணன் பிரசவம் பார்த்ததில், குழந்தை இறந்து பிறந்துள்ள நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு தாம்பரம், திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மோனிஷா(20), நிறைமாத கர்ப்பிணியான இவர், தன் சகோதரரான சிபின் என்பவருடன் தங்கியுள்ளார்.
நேற்று காலை மோனிஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது அண்ணன் சிபின் பிரசவம் பார்த்து பெண் குழந்தை பிறந்துள்ளது.
அத்தருணத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த போது, ரத்தப்போக்கு அதிகமாகி குழந்தை இறந்துள்ளது.
குழந்தையின் தாய் மோனிஷா மயக்க நிலைக்குச் சென்றுள்ளதையடுத்து, ஆம்பலன்ஸ் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.