சிறிய விதையில் இத்தனை நன்மைகளா? குளிர்கால உணவில் இப்படி சேருங்க
கொஞ்சம் எள் எடுத்து அதை இந்த குளிர்கால உணவில் சேர்த்துக்கொண்டால் அது உடலுக்கு பல நன்மைகைளை கொடுக்கும்.
எள் நன்மைகள்
தற்போது குளிர்காலம் வந்துவிட்டது, அதனுடன் நம் உணவில் நம்மை உள்ளிருந்து சூடாக வைத்திருக்கக்கூடிய சில உணவுகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு ஒரு நல்ல உணவாக எள் விதை பார்க்கப்படுகின்றது. இது பார்ப்பதற்கு தான் மிகவும் சிறிய விதை. ஆனால் இதன் சத்துக்களோ ஏராளம்.
எள்ளில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது. அது என்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

உடலுக்கு எவ்வாறு பயன் தரும்?
- எலும்புகளை வலுப்படுத்துகிறது: எள்ளில் பாலை விட அதிக கால்சியம் உள்ளது. இது நமது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது.
- இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது: எள்ளில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய் அபாயத்தைத் தடுக்கின்றன எனப்படுகின்றது.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது: எள்ளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலை நீக்கி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
- உடனடி ஆற்றல்: குளிர்காலம் வந்துவிட்டால் எல்லோரும் சோம்பலாக இருப்போம். இந்த நேரத்தில் எள் சாப்பிடுவது உடனடி ஆற்றலை தந்து உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
- இரத்த சோகையை குணப்படுத்துகிறது: எள் விதையில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், இரத்த சோகையை குணப்படுத்த உதவியாக இருக்கும்.

- சருமத்தைப் பிரகாசமாக்குகிறது: எள்ளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை சருமத்தை சூரியக்கதிர் பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றன. இதனால் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க முடியும்.
- இரத்த அழுத்தக் கட்டுப்பாடு: எள்ளில் மெக்னீசியம் இருப்பதால், இது உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- மன அழுத்தத்தைக் குறைக்கிறது: எள்ளில் மனநிலையை மேம்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும் சில சேர்மங்கள் உள்ளன. எனவே மன அழுத்தம் குறை்க எள் சாப்பிடலாம்.
- கூந்தலுக்கு நன்மை: எள்ளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்றுவதோடு , முடி உதிர்தலையும் குறைக்கிறது.
- வெப்ப விளைவு: குளிர்காலத்தில் உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருக்க இது ஒரு இயற்கையான மற்றும் சிறந்த தீர்வாகும்.

உணவாக எப்படி சேர்ப்பது?
எள் விதை லட்டு அல்லது சிக்கிஸ்: இந்த லட்டு உணவு மிகவும் பாரம்பரியமான மற்றும் பிரபலமான முறையாகும். எள்ளில் லட்டு செய்து மாலை நேர சினாக்ஸ் சாப்பிட தோணும் போது சாப்பிடலாம்.
சாலடுகள் மற்றும் காய்கறிகளில்: தினமம் சாப்பிடும் சாலட், தயிர் அல்லது எந்த உலர்ந்த காய்கறிகளிலும் (வறுத்த எள்ளைத் தூவி சாப்பிடலாம்.
காலை உணவோடு: காலை உணவாக கஞ்சி, ஓட்ஸ் அல்லது ஸ்மூத்தியில் ஒரு டீஸ்பூன் எள் சேர்க்கவும். இதுபோல பல வழிகளில் எள்ளை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
ஒரு கொஞ்சமாக எள் சாப்பிட்டால் கூட அது நம் உடலுக்கு பல நன்மைகளை தரும் எனவே உள்ளை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |