Bigg Boss: பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை கீர்த்தி சுரேஷ்... கம்ருதினுடனான காதலை முறித்த பாரு
பிக் பாஸ் வீடு தற்போது பள்ளிக்கூடமாக மாறியுள்ள நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் கெமி வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் இன்னும் 15 பேர் உள்ள நிலையில் இதில் 12 பேர் நாமினேஷனுக்கு சென்றுள்ளனர்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை பள்ளிக்கூடமாகவும், போட்டியாளர்களை மாணவர்களாகவும் மாறறியுள்ளனர். பாரு கம்ருதின் இடையே சென்று கொண்டிருக்கும் காதல் விவகாரத்தில் பாரு முற்றுப்புள்ளி வைப்பது போன்று கூறியுள்ளார்.

பாருவின் இந்த காதல் விளையாட்டை பாதிப்பதாக அமித் பார்கவ் நேருக்கு நேராகவே கூறியுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் விட்டிற்குள் நடிகை கீர்த்தி சுரேஷ் வந்துள்ளார்.
இவர் தனது படம் ரிவால்வர் ரீட்டா வெளியாவதாகவும், படம் எவ்வாறு உள்ளது என்பதையும் போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் போட்டியாளர்களுடன் சேர்ந்து நடனமாடியும் அசத்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |