இந்த பிரச்சினை இருக்கா? அப்போ முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடாதீங்க!
பொதுவாகவே புரதத்திற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது.
முட்டையில் வைட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக காணப்படுகின்றது.அதோடு புரதச்சத்துக்கு முட்டை தான் சரியான உணவாக இருக்கும் என்பதால், உடல் எடையைக் குறைக்கும் முயற்ச்சியில் இருப்போருக்கும் ஊட்டச்சத்து நிபுணர்கள் முட்டை சாப்பிட பரிந்துரைக்கின்றார்கள்.

மூளையின் சுருசுருப்பான இயக்கத்திற்கும், ஞாபக திறன் அதிகரிக்கவும் முட்டையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
இருப்பினும் ஒரு சில உடல் ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதோ அல்லது தவிர்பதோ நல்லது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்தவகையில் எவ்வாறான உடல் ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்களுக்கு முட்டையின் மஞ்சள் கரு பாதக விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு காணப்படுலதால், இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய், கீல்வாதம் அல்லது சில ஒவ்வாமைகள் உள்ள நபர்கள் இதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது அல்லது தவிர்ப்பது சிறப்பு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக முட்டை நுகர்வு பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது என்றாலும், அதிக கொழுப்பு, இதய நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் பிளேக் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் முட்டை மஞ்சள் கருவில் உள்ளது நல்ல கொழுப்பு என்றாலும், ஏற்கனேவே கொலஸ்ரால் பிரச்சினை இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும், ஏனெனில் அதிக கொழுப்பு உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு இருதய சிக்கல்களை மோசமாக்கும் என எச்சரிக்கப்படுகின்றது.

முட்டையின் மஞ்சள் கருவில் பியூரின்கள் அதிகளில் உள்ளன, அவை உடலில் யூரிக் அமிலமாக உடைக்கப்படும் சேர்மங்களாகும். அதிகப்படியான யூரிக் அமிலம் வலிமிகுந்த கீல்வாத தாக்குதல்களைத் தூண்டும் எனவே கீல்வாத பிரச்சினையுள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது நல்லது.

முட்டை ஒவ்வாமை உள்ளவர்கள் குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது சிறப்பு, மேலும் தோல் வெடிப்புகள் அல்லது செரிமான கோளாறுகள் போன்ற லேசான அறிகுறிகளிலிருந்து அனாபிலாக்ஸிஸ் போன்ற கடுமையான எதிர்வினைகள் வரை முட்டை ஒவ்வாமை எதிர்வினைகள் மாறுபடும். இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |