பார்வதியை புலம்ப விட்ட கம்ருதீன்.. பிரித்து விட்டு விளையாடும் அரோரா
பிக்பாஸ் சீசன் 9-ல் 7 வாரம் ஆரம்பமாகி பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் வேளையில் பார்வதி, கம்ருதீன் தன்னுடைய காதலை புரிந்து கொள்ளவில்லை என புலம்பிக் கொண்டிருகிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

கடும் விவாதங்களுக்கு மத்தியில் ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் மற்றும் கெமி என கொண்டாடப்படும் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாருவை புலம்ப விட்ட அரோரா
இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்த வேளையில், இரண்டு கார்கள் உள்ளே அனுப்பப்பட்டு, கெமி வித்தியாசமான முறையில் வெளியேற்றப்பட்டார். அவருடன் வெளியில் அனுப்பப்பட்ட பிரஜன் மீண்டும் உள்ளே தன்னுடைய யதார்த்தமான விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்.
பிரஜன், திவ்யா, சாண்ட்ரா விளையாட்டு ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கிறது என்றாலும் இவர்களை குறி வைத்து விக்ரம் தரமான வேலைபாடுகளை பார்க்கிறார்.

இதற்கிடையில், துஷார் வெளியில் சென்றதும், பார்வதியிடம் நெருக்கமாக இருந்த கம்ருதீனை அரோரா தன்வசப்படுத்தி விட்டார். தற்போது கம்ருதீன்- அரோராவிடம் நெருக்கமாக இருக்கும் காட்சியை அதிகமாக பிக்பாஸ் எபிசோடில் பார்க்க முடிகிறது.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாரு அமித்திடம் புலம்பிக் கொண்டிருக்கிறார். அதற்கு அமித், “ நீங்க இப்படி பிக்பாஸ் வீட்டில் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது உங்களின் விளையாட்டை பாதிக்கிறது.” எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |