சரும பொலிவு முதல் இதய ஆரோக்கியம் வரை... தங்கம் அணிவதால் இவ்வளவு நன்மை இருக்கா?
பொதுவாகவே பெண்களை பொருத்தவரையில் தங்கத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். தங்கம் என்ற வார்த்தையிலேயே ஏதோ மேஜிக் இருக்கின்றது.
அதனால் தான் சாதனையின் சின்னங்களாகவும் பெருமதியின் உச்சத்திலும் எப்போதும் தங்கம் முக்கிய இடம் வகிக்கின்றது.

தங்கம் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது மருத்துவத்திலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் தங்கம் சரும அழகை மேம்படுத்துவதிலும் இளமையை தக்க வைப்பதிலும் ஆற்றல் காட்டுவதாக ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதனால் தான் சரும பராமரிப்பு தயாரிப்புகளிலும் தங்கம் பெருமளில் பிரபலமாக இருக்கின்றது. தங்கத்தை வெறுமனே அழகுக்கான மட்டும் அணிவது கிடையாது.

தங்கத்தை எந்த பாகத்தில் அணிகின்றோமோ அதற்கு ஏற்ற வகையில் ஆரோக்கிய நன்மைகனை கொடுக்கின்றது. இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்

காதணிகள் - தங்க காதணிகளை அணிவது உங்கள் கண்களில் ஏற்படும் உராய்வைக் குறைத்து உங்கள் பார்வையை மேம்படுத்தும் என்று அறிவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது. ஏனெனில் காதில் உள்ள நரம்புகள் கண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன, எனவே தங்க காதணி அணிவது உங்கள் பார்வையை கூர்மைப்படுத்துத்துதில் ஆற்றல் காட்டுகின்றது.

மோதிரம் - தங்க மோதிரம் அனைவராலும் விரும்பப்படுகிறது மற்றும் எந்த நகை சேகரிப்பிலும் மிக முக்கியமான பகுதியாகும். அறிவியல் ஆராய்ச்சியின் படி, தங்க மோதிரத்தை குறிப்பாக மோதிர விரலில் அணிவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது, ஏனெனில் அதில் மூளை வரை செல்லும் ஒரு நரம்பு உள்ளது, இது மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளியிட உதவுகிறது.

மூக்குத்தி- தங்கத்தில் மூக்குத்தி அணிவதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும் என அறிவியல் ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.இது குழந்தைப் பிரசவ வலியின் போதும் நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

தங்க நெக்லஸ் - தங்கத்தை கழுத்தில் அணிவதால் இதய ஆரோக்கியம் மேம்படும் என குறிப்பிடப்படுகின்றது. தங்க நெக்லஸ் அணிவது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இதனால் இதயம் தொடர்பான பிரச்சினைகளைக் குறைக்கிறது.

தங்க வளையல்கள் - தங்கத்தில் வலையல் அணிவதன் மூலம் உடலில் சில மின்காந்த ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கு உதவுவதுடன், இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் துணைப்புரிகின்றது.

இடுப்பு ஆபரணம்- தங்கத்தை இடுப்பில் ஆபரணமாக அணியும் போது, மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது. மேலும் வலியைக் குறைக்க உதவுகின்றன. தெற்காசியாவில் பல பெண்கள் தங்க இடுப்பு பட்டைகளை அணிவதற்கான காரணம் இதுதான்.
இது மாத்திரமன்றி உடலில் தங்கத்தை எந்த பாகத்தில் அணிந்தாவும் அதன் காந்த ஆற்றல் சரும அழகை மேம்படுத்துவதுடன் இளமையை பாதுகாக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |