உங்களுக்கு இரத்தம் ரொம்ப கம்மியா இருக்கா..? ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் இதோ!!
பொதுவாக நாம் ஹீமீகுளோபின் எனக்கூறுவது சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும்.
இது உடலிவுள்ள மற்றை பாகங்களிலிருந்து ஆக்ஸிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் - டை- ஆக்ஸைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது.
இதன்படி, ஹீமீகுளோபின் அளவு குறைவு என்றால் இரத்தத்திலுள்ள சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என அர்த்தம்.
அந்த வகையில், ஹீமீகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஹீமீகுளோபின் அளவை அதிகரிக்கணுமா?
1. பசலைக் கீரையில் இரும்புச் சத்து நிறைவாக உள்ளது. அதோடு ஃபோலேன் இருப்பதால் இரத்த செல்களின் உற்பத்தியும் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.
2. பீட்ரூட்டில் இரும்பு சத்து, ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆன்ஸிடன்ட் இருப்பதால் இது இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
3. இரத்த குறைவாக இருப்பவர்கள் காலையில் பருப்புணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனின் இது இரும்பு சத்து நிறைந்தவை ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
4. பழங்களில் அதிகமான சத்துக்களை கொண்ட பழம் தான் மாதுளை. இதில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைவாக இருப்பதால் இது இரும்புச் சத்தை துரிதமாக உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
5. சந்தையில் அதிகமாக விற்பணையாகும் பழங்களில் ஆப்பிளும் ஒன்று. ஆப்பிள் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்த பழம். எனவே உடம்பிலுள்ள இரத்தயோட்டம் சீர்ப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |