ஹீமோகுளோபின் அளவை கடகடவென அதிகரிக்க வேண்டுமா? இதை கட்டாயம் சாப்பிடுங்க
உடம்பில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கின்றது என்றால் ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது என்று அர்த்தமாம்.
இரத்த சோகை என்று கூறப்படும் இந்த நிலையினால் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஹீமோகுளோபின் என்பது ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும்.
இவை உடலின் மற்ற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் - டை- ஆக்ஸைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்
இரும்புச்சத்து நிறைந்து காணப்படும் உணவுகளில் பசலை கீரை ஒன்றாகும். இவற்றில் ஃபோலேன் இருப்பதால் இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவி செய்கின்றது.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் இவை ஹீமோகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்கின்றது.
பருப்பு வகைகளில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்கின்றது.
வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து நிறைந்து காணப்படும் மாதுளை, ஆப்பிள் இவற்றினை தவறாமல் சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்குமாம்.
பேரிட்சை பழத்தில் அதிகமான இரும்பு சத்து உள்ளதால் ஹீமோகுளோபினை அதிகரிக்கின்றது.
காய் வகைகளில் ஒன்றான ப்ரக்கோலியில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி, ஃபோலேட் நிறைந்து காணப்படும் நிலையில், இவையும் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவி செய்கின்றது.
தர்பூசணி பழம் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்குவதுடன், இதிலும் இரும்பு சத்து நிறைந்து காணப்படுவதால் ரத்தம் உற்பத்தி சிறப்பாகவே இருக்கும்.
நட்ஸ் வகைகளில் ஒன்றான பாதாம் எண்ணற்ற சத்துக்கள் கொண்டுள்ளதுடன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஈ நிறைந்து காணப்படுவதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கின்றது.
பீன்ஷ் மற்றும் கொட்டை வகைகளும் இரும்புச்சத்தை அதிகம் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஃபோலேட் மற்றும் புரோட்டீன் நிறைந்து காணப்படும் இதுவும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |