தூங்கச் செல்வதற்கு முன்பு தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தொப்புள் பகுதியானது மிகவும் உணர்திறமிக்க ஒரு பகுதி. இது நமது உடலில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பகுதி தான் என்று சொல்ல வேண்டும்.
உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தொப்புள் மூலம் தீர்வு காணலாம், அதிலும் தொப்புள் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் நிறைய நன்மைகள் இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் நமது உடலில் இருக்கும் அனைத்து நரம்புகளில் மையப்புள்ளி தொப்புளில் தான் இருக்கிறது. சுமார் எழுபதாயிரத்திற்கும் மேல்நரம்புகள் தொப்புளிற்கு பின்னால் அமைந்திருக்கிறது.
அதிலும் தொப்புளில் இரவு தூங்கும் போது தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால் என்னென்ன நம்மைகள் இருக்கின்றதென்று தெரியுமா?
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் வைத்தால்
தொப்புளில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் வைத்தால் அனைத்து விமதான சரும பிரச்சினைகள் இல்லாமல் போகும்.
தொப்புளில் தினமும் எண்ணெய் விட்டு வந்தால் கண் பார்வை தெளிவாகும், கண்கள் குறைப்பாடு நீங்கும், கண் வறட்சியைக் குணப்படுத்தும்.
உடலில் ஏற்படும் சூட்டை தணிக்கும்.
உடல் சூட்டால் ஏற்படும் பித்த வெடிப்பு, சரும பிரச்சினை, தலைமுடி பிரச்சினைகளுக்கு சிறந்த பலனைக் கொடுக்கும்.
தொப்புளில் எண்ணெய் விடுவதால் மூட்டு கால் வலிகள் குணமடைகிறது.
தொப்புளில் எண்ணெய் விடுவதால் உடல் நடுக்கம் நீங்கி, சோர்வு மற்றும் கணைய பாதிப்புகளை குறைத்து நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.
சீராக இரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியத்தோடு வைக்கிறது.
நரம்பு பிரச்சினைகளும் நரம்பு பாதிப்புக்களும் ஏற்படாது.