100 வயதிலும் மங்காத கண் பார்வைக்கு அகத்திக் கீரை தேங்காய் பால் போதும்! எப்படி செய்வது தெரியுமா?
கீரைகளில் பல வகை இருப்பினும் ஒவ்வொருன்றுக்கும் ஒரு தனித்துவம் உள்ளது .
அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.
இன்றைய இயந்திர வாழ்க்கையில் சிறுவர்கள் முதல் பெரியர்வகள் வரை அனைவரும் கணினி , கைப்பேசி போன்றவற்றை ஒரே இடத்தில அமர்ந்து பயன்படுத்துவதால் கண்களில் வறட்சி ஏற்படும் .
இதனை சரி செய்ய அகத்தியை பயன்படுத்தி வர கண்கள் குளிர்ச்சி அடையும் பார்வை தெளிவாகும்.
இத்தகைய நன்மைகள் கொண்ட அகத்திக் கீரையை கொண்டு அகத்திக் கீரை தேங்காய் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அகத்திக்கீரை - அரை கட்டு
- தக்காளி - 2
- சின்ன வெங்காயம் - 10
- சீரகம் - 2 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 2
- தேங்காய்ப்பால் - 200 கிராம்
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- அரிசி கழுவின நீர் - 200 மில்லி
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை
அகத்திக்கீரையை நன்றாகச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். வெங்காயம், சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும். பின்னர் அகத்திக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கீரை வெந்தபின் அரிசி கழுவின நீர்விட்டு ஒரு கொதிவந்தவுடன் தேங்காய்ப்பால் ஊற்றி இறக்கவும்.
சூப்பரான சத்தான அகத்திக் கீரை தேங்காய் பால் சூப் ரெடி.