சருமத்திற்கு அழகை அள்ளிக்கொடுக்கும் விளக்கெண்ணெய்: இனிமேல் பியூட்டி பார்லர் போக வேண்டியதே இல்லை!
பொதுவாகவே முகப் பராமரிப்பு என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. பெண்கள் எப்போதும் தங்கள் சரும அழகை பேணுவதில் அதிக கவனமெடுத்துக்கொள்வார்கள்.
ஆனால் நிறைய நிறைய நன்மைகள் தன்னகத்தே கொண்டிருக்கும் விளக்கெண்ணெய்யை மறந்து விடுகிறார்கள். விளக்கெண்ணெய்யை மாத்திரம் பயன்படுத்தினால் போது பியூட்டி பார்லர் போக வேண்டிய தேவையே இருக்காது. விளக்கெண்ணெய்யில் அத்தனை நன்மைகள் இருக்கின்றது.
விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய்யானது முகத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. இது மிகவும் பாரம்பரியமானது, இந்த எண்ணெய் முக அழகிற்கு மாத்திரமல்ல உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வான அமைகிறது. அதவாது, விளக்கெண்ணெய்யைக் கொண்டு தலை முதல் பாதம் வரை இருக்கும் அத்தனை பிரச்சினைகளும் பெரும் உதவியாக இருக்கிறது. அவற்றில்
- மூட்டு வலி நீங்குவதற்கு
- உடம்பில் மேல்தோல் உரசி உண்டாகும் சிராய்ப்பு காயங்களுக்கு
- உடல் சூட்டைத் தணிப்பதற்கு
- முழங்கால் வலி மற்றும் வீக்கங்களுக்கு
- மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு
- மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலி நிவாரணி
- பால் சுரப்பு அதிகரிக்க
என பல நாட்பட்ட பிரச்சினைகளுக்கு பெரிதும் உதவுகிறது.
சருமத்திற்கு விளக்கெண்ணெய்
- விளக்கெண்ணெய் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்கும்
- எண்ணெய்பசை தன்மையால் முகங்களில ஏற்படும் முகப்பருவை தடுக்க உதவும்
- முகத்தில் சிவப்பு தடிப்பு, அரிப்பு போன்றவை சரும பாதிப்புக்கு
- சரும அழற்சியை போக்குவதற்கு
- வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சலை அகற்றுவதற்கும்
- வயதான சருமத் தோற்றத்தை தடுக்கும்
- கரும்புள்ளிகளை அகற்றும்
என முகத்தில் இருக்கும் பாதிப் பிரச்சினைகளை தீர்க்க வல்லது விளக்கெண்ணெய்.
பயன்படுத்தும் முறை
விளக்கெண்ணெய் இரண்டு தேக்கரண்டி எடுத்து அதில் சுத்தமான பருத்தி உருண்டையை நனைத்து ஊறவைத்து சருமத்தில் முகம், கழுத்து பகுதியில் நேரடியாக துடைத்து விடவும்.
பிறகு வட்ட இயக்கங்களில் 3-5 நிமிடங்கள் எண்ணெயை மசாஜ் செய்யவும். பிறகு இலேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை கழுவி எடுக்கவும்.
விளக்கெண்ணெய் அடர்த்தியை விரும்பாதவர்கள் மற்ற தாவர எண்ணெய்களுடன் இதை கலந்து பயன்படுத்தலாம்.