எப்பொழுதும் சோர்வாகவே இருக்கின்றீர்களா? Vitamin B9 குறைபாடாக இருக்கலாம்! அலட்சியம் வேண்டாம்
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு வைட்டமின்களின் தேவை மிகவும் முக்கியமாக இருக்கின்றது. இதில் வைட்டமின் பி 9 பயன்கள் குறித்தும், குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் பி9 பயன்கள்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவைப்படும் வைட்டமின்களில் ஒன்று தான் பி9 அல்லது ஃபோலேட்.
அதாவது ஃபோலிக் அமிலம் மிக முக்கியமாக நமது உடலுக்கு தேவைப்படுகின்றது. பொதுவாக உடம்பில் சேதமடைந்த செல்களை சரி செய்வதற்கு இந்த வைட்டமின்கள் கட்டாயம் தேவைப்படுகின்றது.
அதே நேரத்தில் ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்கவும், மன அழுத்தம் மற்றும் புற்றுநோய் போன்ற மரணத்தை கொடுக்கும் நோய்களை தடுக்கவும் உதவி செய்கின்றது.
இந்த வைட்டமின் பி9 குறைபாட்டால், உடலில் பல வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவை என்ன என்பதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் பி9 குறைபாட்டின் அறிகுறிகள்
வைட்டமின் பி9 குறைபாட்டின் முதல் அறிகுறி என்றால் அது ரத்த சோகை ஏற்படுவதே. உடம்பில் உள்ள சிவப்பணுக்காள் உருவாக்க ஃபோலிக் அமிலம் மிகவும் மக்கியமானதாகும். ஆகவை ரத்தம் குறைவாக இருந்தால் அதனை அலட்சியம் செய்யாதீர்கள்.
பலவீனம் மற்றும் சோர்வு இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள். இவையும் வைட்டமின் பி9 குறைபாடாக இருக்கலாம். உடம்பில் ரத்த சிவப்பணுக்கள் குறையும் போது, ஆக்ஸிஜன் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையாது. இதனால் சோர்வு ஏற்படுவதுடன், சருமத்தின் நிறம் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகின்றது.
இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால், முடி சிறுவயதிலேயே நரைக்கக்கூடும். முடிவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஃபோலிக் அமிலம் முக்கியமாகும். ஆதலால் இளம் வயதில் நரைக்க ஆரம்பித்தால் அதனை அலட்சியப்படுத்தாதீர்கள்.
வைட்டமின் பி9 குறைபாட்டின் காரணம் என்ன?
சரியான அளவிலான வைட்டமின் பி9 இல்லாத உணவுத் திட்டத்தை மேற்கொள்ளுதல் ஃபோலேட் குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றது.
குளூட்டன் ஒவ்வாமை போன்ற அகத்துறிஞ்சாமை நோய்கள் ஃபாலேட் உணவில் இருந்து ரத்தத்திற்கு உறிஞ்சப்படுவதைத் தடுப்பதால் ஃபாலேட் குறைபாடுகளுக்கு வழிவகுக்கின்றது.
நெஞ்சடைப்பு, சிறுநீரக செயலிழப்பிற்காக சிறுநீர் பிரித்தல் நீண்ட காலத்திற்கு செய்தல் மற்றும் கல்லீரல் சேதமடைதல் ஆகியவற்றின் பிறழ்வு ஃபோலேட் குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றது.
மீத்தோடிரெக்சேட்டு, சல்ஃபாசலசின் போன்ற மருந்துகள் மற்றும் வலிப்புத்தாக்கங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட மருந்துகள் வைட்டமின் பி9 குறைபாட்டிற்கு வழிவகுக்கின்றது.
கண்டறிந்து சிகிச்சை செய்வது எப்படி?
மருத்துவர் நோய் அறிகுறிகளை அறிந்து, சில ஆய்வக பரிசோதனையை பரிந்துரை செய்யப்படுகின்றது.
நோயாளிகளுக்கு ரத்த சோகை உள்ளதா என்று உறுதி செய்ய முழுமையான குருதி எண்ணிக்கை சோதனை செய்யப்படுகின்றது.
வைட்டமின் பி9 குறைபாடு மொகாலோபிளாஸ்டிக் ரத்த சோகையை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் சிவப்பணுக்கள் சாதாரண அளவை விட பெரியதாக மற்றும் முதிர்ச்சியடையாததாக இருக்குமாம்.
வைட்டமின் பி 9 குறைபாட்டை தடுக்கும் உணவுகள்
- பருப்பு வகைகள்
- முட்டை
- கீரைகள்
- சிட்ரஸ் பழங்கள்
- கொட்டைகள் மற்றும் விதைகள்
ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய் :தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
- ப்ரக்கோலி
- பீட்ரூட்
- பப்பாளி
- வாழைப்பழம்
- அவகோடா இவற்றினை எடுத்துக் கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |