ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு கொடுக்கும் நெல்லிக்காய் :தினசரி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச்சத்து நிறைந்த நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்தும் உடலை பாதுகாக்கின்றது.
அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள நெல்லிக்காயை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்ககூடிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நெல்லிக்காயின் நன்மைகள்
ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுகிறது. இதனை வெயிலில் காயவைத்து பொடி செய்து முகத்தில் பூசி வர முகப்பரு மற்றும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும்.
தொடர்ந்து நெல்லிக்காய் சாற்றை அருந்தி வர தோலின் நிறத்தில் படிப்படியாக மாற்றம் ஏற்படும்.இளநரையை போக்க நெல்லிக்காய் பொடியை நீர்விட்டு குழைத்து தலையில் தடவிவர நல்ல பலன் கொடுக்கும்.
நெல்லிக்காய் கலந்த எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்துவதால் கூந்தல் நீளமாகவும் பளபளப்பாகவும் வளர்கிறது. பொடுகு மற்றும் அது சார்ந்த தொல்லைகளை நீக்கவும் நெல்லிக்காய் எண்ணெய் முக்கிய இடம் வகிக்கின்றது.
கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துவதால் முகப்பரு, சருமம் வறண்டு போகுதல், சொறி சிரங்கு, சருமம் சிவந்து போகுதல் போன்ற சரும பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
நெல்லிக்காய் தலைமுடியை கருமையாகவும் செழிப்பாகவும் வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் இது முக்கிய இடம் வகிக்கின்றது.
அசிடிட்டி, வயிற்று உப்புச பிரச்சனை என இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்கிறது, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், நீரிழிவு நோயை இலகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைத்து அழகிய தோற்றத்தை பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |