முகப்பருக்களுக்கு முடிவு கட்டணுமா? அப்போ இந்த உணவுகளை மறந்துடுங்க
பொதுவாகவே பெண்கள் தங்களுடைய முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். முக அழகை பராமரிப்பதற்காக பலரும் பல வழிகளை மேற்கொள்வார்கள். சிலர் இதற்காக மொத்த சம்பளத்தையும் கூட வீணாக்கிவிடுகின்றார்கள்.
அதிலும் முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே பெண்களுக்கு பெரும் பிரச்சினைதான் இது பெண்கள், ஆண்கள் என இருபாலரும் சந்திக்கும் ஓர் சரும பிரச்சனையாகும். மேலும், இந்த முகப்பருக்களைப் போக்குவதற்கு நீங்கள் சில உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
நீங்கள் தினமும் எவ்வளவு பால் குடிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்கு முகப்பரு அதிகரிக்கும். அதனால் தினமும் பால் குடிப்பதை குறைப்பது நல்லது. பால் குடித்தே ஆக வேண்டும் என நினைப்பவர்கள் கொழுப்பு அற்ற டயட் பால் குடிக்கலாம்.
சருமத்தில் முகப்பரு பிரச்சினை உள்ளவர்கள் சர்க்கரையை உணவில் சேர்க்கக் கூடாது. உங்கள் தினசரி சர்க்கரை தேவையை பழங்களில் இருந்து எடுத்துக்கொள்ள முயற்சியுங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இனிப்புகளில் உள்ள சர்க்கரைகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை உங்கள் முகப்பரு பிரச்சனையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஆல்கஹால் மற்றும் புகைப்பழக்கம் முகப்பருவை உண்டாக்கும் தன்மை கொண்டது எனவே முகப்பருக்களை தவிர்க்க மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் நிறுத்த வேண்டியது அவசியமாகும்.
பொதுவாகவே பெண்களில் பலரும் சாக்லேட் பிரியர்களாக இருப்பார்கள் முகப்பருக்களை அதிகப்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்று இது. எனவே முகப்பருக்களை தவிர்க நினைப்பவர்கள் சாக்லேட் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் தினமும் உண்ணும் உணவில் சக்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருந்தால் இன்சுலின் சுரக்கும் போது ஹார்மோன்கள் பாதிக்கப்பட்டு சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாகி பருக்கள் ஏற்படும்.
எனவே இவ்வாறான உணவுகளை தவிர்ப்பதன் மூலம் பருக்கள் இன்றி முகத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |