அரிசியில் இருக்கும் அசுத்தங்களை நீக்கி பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க ஈஸியான டிப்ஸ் இதோ
இந்திய உணவுகளில் அரிசிக்கு என்று முதன்மையான இடம் ஒன்று இருக்கின்றது. அதே போல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் கண்டிப்பாக இருக்கும். அப்படி தினமும் சமைக்கும் அரிசியை கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவதை விட அதிகமாக வாங்குவது தான் வழக்கம்.
அதிகமாக வாங்கும் போது அது பழுதாகாமல், பூச்சிகள் அரிக்காமலும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் அப்படி இந்த அரிசியை பழுதாகாமல் வைத்திருக்க சில டிப்ஸ் இருக்கிறது.
அரிசியை பாதுகாக்க
அரிசியில் இருக்கும் தூசி, கற்கள் மற்றும் உமிகளை அகற்ற அரிசியை சல்லடை அல்லது வடிகட்டி மாற்றி சுத்தம் செய்யவும்.
அரிசியை கொண்டு சமைக்கும் போது அதை ஊறவைத்து 2 அல்லது 3 கழுவி கொள்ளவும்.
அரிசியில் இருக்கும் புழுக்கள் மற்றும் வண்டுகளை நீக்க அரிசி சேமித்து வைத்து இருக்கும் கொள்கலனில் 4 அல்லது 6 பிரியாணி இலைகளை போட்டு வைக்கவும்.
அதேபோல அரிசி கொள்கலனில் கிராம்புகளையும் சேர்த்து வைக்கலாம். இது பூச்சிக் கொல்லிகளை தவிர்க்க உதவுகிறது.
அரிசி சேமித்து வைத்திருக்கும் பாத்திரத்தில் தோல் உரிக்காத பூண்டு பற்களை போட்டு வைத்தால் பூச்சிகளிடம் இருந்து அரிசியைப் பாதுகாக்கலாம்.
அரிசியை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது அனைத்து அந்துப்பூச்சிகளை கொல்லும்.
வேப்ப இலைகளில் பூச்சிகள் விரும்பாத வலுவான வாசனை உள்ளது. அதனால் அரிசி கொள்கலனில் சில வேப்ப இலைகளைச் சேர்த்து வைத்தால் பூச்சிகள் அதிலிருந்து விலகிச் செல்லும்.
அரிசி கொள்கலனில் புதிய புதினா இலைகளைச் சேர்க்கும்போது பூச்சிகளிடமிருந்து அரிசியை பாதுகாக்க உதவியாக இருக்கும். ஈரமான இலைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |