மரணத்தை கூட ஏற்படுத்தும் வைட்டமின் பி3(Vitamin B3) குறைபாடு! அறிகுறிகள் என்ன?
உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்களில் ஒன்றான வைட்டமின் B3 பயன்கள் மற்றும் அதன் குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சினை என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
வைட்டமின் B3
வைட்டமின் பி 3, நியாசின் என்றும் அழைக்கப்படுகிறது, இது இரண்டு முக்கிய ஆற்றல் ஆதாரங்களான கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகளைப் பயன்படுத்த உதவி செய்து உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.
இது உடலின் ஒவ்வொரு உயிரணுவிற்கும், குறிப்பாக இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் பி3 குறைபாடு கடுமையான உடல்நல பிரச்சினையை ஏற்படுத்தும்.
நீரில் கரையக்கூடிய வைட்டமின்களில் ஒன்றான நியாசின் அல்லது நிகோடினிக் என்று அழைக்கப்படும் பி3 வைட்டமின்களின் செயல்பாடு முக்கியமாகும்.
நியாசின் உணவில் இருந்து ஆற்றலை வெளியிட உதவுகிறது மற்றும் நைட்ரிக் ஆக்சைடை உருவாக்க கொழுப்புகள் மற்றும் அமினோ அமிலங்களை உடைக்க உதவுகிறது.
வைட்டமின் பி3ல் மூன்று வடிவங்கள் காணப்படுகின்றது. நிகோடினமைடு (நியாசினமைடு), இனோசிட்டால் ஹெக்ஸானியாசினேட் (HNIC) மற்றும் நிகோடினைல் ஆல்கஹால் ஆகும்.
மிகவும் அதிகயமான பயன்படுத்தப்படுவது என்றால் நியாசின். இது உடற்பயிற்சி மற்றும் உணவு மாற்றத்துடன் இணைந்தால் கொழுப்பின் அளவை 15% வரை குறைக்கிறது. வைட்டமின் பி 3 இன் குறைபாடு பெல்லாக்ரா என்று அழைக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் கூட நிகழுமாம்.
வைட்டமின் B3 குறைபாட்டின் அறிகுறிகள்
வறண்ட, செதில் மற்றும் தடித்த சருமம்
வாந்தி, வயிற்றுப்போக்கு
சிவப்பு நிறத்தில் நாக்கு
வாய்வீக்கம்
சோர்வு
மனச்சோர்வு
கவனச்சிதைவு
நினைவாற்றல் இழப்பு
தலைவலி
வைட்டமின் B3 குறைபாட்டிற்கான காரணம்
Tryptophans இல்லாத உணவை உட்கொள்வது
ஹார்ட்நப் நோய் அல்லது கார்சினாய்டு சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்படடவர்கள்
ஊட்டச்சத்து குறைபாடு
மது அருந்துதல்
குடல் அழற்சி மற்றும் பசியின்மை
வலிப்பு எதிர்ப்பு மருந்துகள், இரத்த அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வது
வைட்டமின் B3 குறைபாட்டை எவ்வாறு கண்டறிவது?
வைட்டமின் பி3 அளவை சரிபார்க்க நியாசின் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
இரத்த சிவப்பணுக்களில் பிஎல்பியின் செறிவு குறைவாக இருக்கின்றதா என்பதை சோதனை செய்யவும்.
சிகிச்சை மற்றும் உணவு என்ன?
வைட்டமின் பி3 குறைபாடு காணப்பட்டால் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப்புண் வாந்தி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அனுகவும்.
நியாசின் அதிகமான உணவுகளான சிவப்பு இறைச்சி, மாட்டிறைச்சி, கல்லீரல், பன்றி இறைச்சி எடுத்துக்கொள்ளவும்.
கோழி, மீன், தானியங்கள், ரொட்டிகள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், வாழைப்படம் இவற்றில் வைட்டமின் பி3 அதிகமாக உள்ளதால் உணவில் இதனை சேர்த்துக் கொள்ளவும்.
கோழி, மீன், தானியங்கள், ரொட்டிகள், பருப்பு வகைகள், கொட்டைகள், விதைகள், வாழைப்படம் இவற்றில் வைட்டமின் பி3 அதிகமாக உள்ளதால் உணவில் இதனை சேர்த்துக் கொள்ளவும்.
ஏகப்பட்ட உடல் பிரச்சினைகளுக்கு மருந்தாகும் வெந்தய தண்ணீர்... வெறும் வயிற்றில் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
டெட்ராசைக்ளின் அல்லது பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் போன்ற சில மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், உங்கள் உடலில் வைட்டமின் பி சத்து குறைய வாய்ப்புள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |